லீ-மெரிடியன் ஹோட்டலை வாங்க ரூ.423 கோடி மதிப்புள்ள கையகப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை ஒப்புதல்
கோயமுத்தூரிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டல்களை விரைவில் எம்.ஜி.எம் ஹெல்த் கேர் குழுமத்தின் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் வாங்குவதாக தகவல் வெளியாகிய நிலையில்
அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், இந்திய சுற்றுலா நிதிக் கழகத்திற்கு (TFCIL) கொடுக்க வேண்டிய ரூபாய்.18 கோடி நிலுவைத் தொகையை கேட்டு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் (NCLT) புகார் மனு ஒன்றை டி.எஃப்.சி.ஐ.எல் பதிவு செய்தது. அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு கால அவகாசம் வழங்கியும் நிலுவைத் தொகையை வழங்காததால், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வாராக்கடனாக அறிவிக்கப்பட்ட பிறகும், கொரோனா பிரச்னையைக் காரணம் காட்டி, அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் நிலுவைத் தொகையை செலுத்தும் நிலையிலில்லை எனக் கூறியதால், இந்திய சுற்றுலா நிதிக் கழகம் திவால் நடவடிக்கைகளை எடுத்தது.
கடன்களை அடைப்பதற்காக அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை விற்க சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. மாதவ் தீர் (Director at Lords Chloro Alkali Ltd), எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் எம்.கே.ராஜகோபால் மற்றும் கோட்டக் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் (Kotak Special Situations) ஆகிய நிறுவனங்கள் லீ மெரிடியன் ஹோட்டலை வாங்க
மூன்று நிறுவனங்களும் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில், சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே. ராஜகோபாலன் தாக்கல் சேய்த ரூ.423 கோடி மதிப்புள்ள கையகப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை ஒப்புதல் அளித்தது, லீ மெரிடியன் ஹோட்டல்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய்.1,600 கோடி என்பதால் குறைந்த ஏலத்திற்கு விற்பது நியாயமில்லை என்றது, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
கருத்துகள்