ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்
போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்திற்கு ஜெர்மனியில் இருந்து வந்த எம்எம்டிஏ மாத்திரைகள் கொண்ட பார்சல் ஒன்றை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையை சேர்ந்த நபர் ஒருவருக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்த போது, வெள்ளி நிற நெகிழி பொட்டலம் ஒன்று அதனுள் இருந்தது. அந்த பொட்டலத்திற்குள் இருந்த மற்றுமொரு பொட்டலத்தில் ‘மசேரட்டி 300 எம்ஜி என் எல்’ எனும் முத்திரையிட்ட 100 பச்சை வண்ண மாத்திரைகள் இருந்தன. ரூ 5 லட்சம் மதிப்பிலான இந்த மாத்திரைகள் தேசிய போதை பொருள் தடுப்பு சட்டம், 1985-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்