74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக்கூடத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ராஜ்குமார் ஹிரானியின் பிகே திரைப்படம் தற்போது இந்திய தேசிய திரைப்பட காப்பகத்தில் சேர்ப்பு

ராஜ்குமார் ஹிரானியின் பிகே(2014) திரைப்படத்தின் அசல் கேமிரா நெகட்டிவ், தங்களின் சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய திரைப்பட  காப்பகம் அறிவித்துள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் ராஜ்குமர் ஹிரானி, 2014ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தனது பிகே திரைப்படத்தின் அசல் கேமிரா நெகட்டிவை, மும்பையில்  இந்திய தேசிய திரைப்பட காப்பக இயக்குனர் பிரகாஷ் மேக்டமிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து ராஜ்குமார் ஹிரானி கூறுகையில், ‘‘ஒரு திரைப்படத்தின் நெகட்டிவை பாதுகாப்பது முக்கியம். எனது பிகே படத்தின் நெகட்டிவ் புனேவில் உள்ள இந்திய தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் (NFAI)பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திரைப்படங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது திரைப்படத் தயாரிப்பாளரின் கடமை.  இதற்கு சினிமா தயாரிப்பாளர்கள், என்எப்ஏஐ அமைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.

என்எப்ஏஐ இயக்குனர், பிரகாஷ் மேக்டம் கூறுகையில், ‘‘திரு ஹிரானியுடன் எங்கள் தொடர்பு தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது முந்தைய படங்கள் என்எப்ஏஐ-ஆல் பாதுகாக்கப்படுகின்றன. எங்கள் சேகரிப்பில், பிகே படத்தை சேர்ப்பது மிகச் சிறப்பானது. இது செல்லுலாய்டு கேமிராவில் படம் பிடிக்கப்பட்டது. இதை டிஜிட்டலுக்கு மாற்றுவது இந்தியாவில் 2013-14ம் ஆண்டு நடந்தது. ஆகையால், இந்த படத்தை பாதுகாப்பது முக்கியமானது’’ என்றார்.

இந்த படத்தின் ஒரிஜினில் கேமிரா நெகட்டிவ் தவிர, பிகே திரைப்படத்தின் 300 பதிவுகள், 3 இடியட்ஸ் திரைப்படத்தின் பதிவுகளும் பாதுகாத்து வைப்பதற்காக ஒப்படைக்கப்பட்டன.
74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக்கூடத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்

பெருந்தொற்றிலிருந்து உலகம் விரைவில் மீண்டு மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தொடங்குவார்கள் என்று 74- வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவைத் தொடங்கி வைத்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியுடன் இணைந்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக் கூடத்தின் காணொலி வாயிலான திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரண்டாவது ஆண்டாக காட்சிக்கூடங்கள் காணொலி வாயிலாக நடத்தப்பட்டாலும், இதில் இடம்பெற்றுள்ள படைப்புத்திறன், திறமை, தொழில்நுட்பம் ஆகிய அனைத்தும் உண்மையானது என்றும், இவற்றில் மிக சிறந்தவற்றையே இந்தியா வழங்குவதாகவும் கூறினார். “வருங்கால உலக திரைப்படம் குறித்து விவாதிக்கும் தளமாக இந்த மெய்நிகர் இந்திய காட்சிக்கூடம் செயல்படலாம்”, என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 500 தளங்களுடன்  ஏராளமான சர்வதேசத் திரைப்படங்கள் இந்தியாவில் படமாக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் பல சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை ஈர்ப்பதற்காக இந்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார். “அனைத்து விதமான அனுமதிகளையும் ஒருங்கே வழங்குவதற்கு ஏதுவாக எளிதாக்கும் அலுவலகத்தையும் தற்போது நாம் தொடங்கியுள்ளோம்”, என்றார் அவர்.

பல்வேறு ஆங்கில திரைப்படங்களுக்குத் தேவையான காட்சி விளைவுகள் உயிரூட்டுதல், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், உலகத் திரைப்படங்களுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் திரு ஜவடேகர் தெரிவித்தார். “கேன்ஸ் திரைப்படத் திருவிழா, படைப்பாற்றல் மற்றும் திறமைக்கான திருவிழா என்ற போதும் அதே வேளையில் வர்த்தகத்திற்கான தளமும் கூட. கேன்ஸ் திரைப்பட சந்தை உலகெங்கும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. பெருந்தொற்றுக்குப் பிறகு, திரைப்படங்கள் மிகப்பெரிய வர்த்தகத்தை ஈட்டுவதோடு, ஓடிடி தளங்களுக்காகவும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரஃப் பேசுகையில், இந்திய திரைப்படங்களை உலகிற்கு காட்சிப்படுத்தும் சாளரம் என்ற முக்கியத்துவத்தை  கேன்ஸ் திரைப்படத் திருவிழா பெற்றிருக்கிறது என்று கூறினார். கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் நீங்கிய பிறகு சர்வதேச திரைப்படத் துறையினருடன் மீண்டும் இணையும் ஓர் வாய்ப்பை இந்தத் திருவிழா மற்றுமொருமுறை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். “சர்வதேச கூட்டணியை ஊக்குவிப்பதற்கும், உள்நாட்டு திரைப்படத் துறையில் ஓடிடி மின்னணு தளங்களின் தாக்கத்துடன் திரைப்படங்களை படமாக்குவதற்கு இந்தியாவை உகந்த இடமாக ஊக்குவிக்கவும் வாய்ப்பளிக்கப்படும். நமது பன்முகத்தன்மை, பாரம்பரியத்தின் பிம்பமாக இந்திய திரைப்படம் விளங்குகிறது. திரைப்படங்களை போன்று இந்தியாவை ஒருங்கிணைப்பது வேறு எதுவுமில்லை. சுதந்திர தேசமாக நமது பயணம், இந்திய திரைப்படங்களால் திறம்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளது”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிக அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அமித் காரே கூறினார். “பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு இடையையும் நமது கலாச்சார மற்றும் திரைப்பட பாரம்பரியத்தை, திரைப்படத் தயாரிப்பின் மேம்பட்ட அம்சங்களுடன் இந்திய காட்சிக் கூடத்தில் நாம் காட்சிப்படுத்துகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். திரு சத்யஜித் ரேவின் நூற்றாண்டு கொண்டாட்டங்களுடன் இந்தியாவின் 75-வது சுதந்திர தினமும் இந்த ஆண்டும் கொண்டாடப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா