83-வது அமைப்பு நாள்: சென்னை சிஆர்பிஎஃப் கொண்டாட்டம்

 83-வது அமைப்பு நாள்: சென்னை சிஆர்பிஎஃப் கொண்டாட்டம்

மத்திய ரிசர்வ் காவல் படை(சிஆர்பிஎஃப்), தனது 83-வது அமைப்பு தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடியது. ஆவடி சிஆர்பிஎஃப் குழு மையத்தின் காவல்துறை துணை ஆய்வாளர் திரு எம் தினகரன், கமாண்டன்ட் திரு டி வி தாமஸ் மற்றும் உயரதிகாரிகள், தமிழ்நாடு கல்வித் துறையின் மாவட்டக் கல்வி அதிகாரி திரு பாலகிருஷ்ணன், இணை இயக்குநர் திரு ஜெயகுமார் ஆகியோர் சிஆர்பிஎஃப்  தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து சிஆர்பிஎஃப் வளாகத்தில் பிரம்மாண்ட மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் இதற்காக 5400 மரக்கன்றுகளை வழங்கி, இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். திரு எம். தினகரன், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கொவிட்-19 நெறிமுறைகளுக்கு  உட்பட்டு அதிகாரிகள் மற்றும் அரசு சாரா உறுப்பினர்களுக்கிடையே பாட்மின்டன், இழுபறி போட்டிகளும் நடைபெறுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா