செரோ பரவல் ஆய்வுகளை, மாவட்ட அளவிலான தரவுகளை உருவாக்க ஐசிஎம்ஆர் உடன் ஆலோசித்து மேற்கொள்ள மத்திய அரசு அறிவுரை

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்  மாவட்ட அளவிலான தரவுகளை உருவாக்குவதற்கு செரோ பரவல் ஆய்வுகளை ஐசிஎம்ஆர் உடன் ஆலோசித்து மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை


உள்ளூர் அளவில் பொது சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு அவசியமான செரோ பரவல் ஆய்வுகளை, மாவட்ட அளவிலான தரவுகளை உருவாக்குவதற்கு  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் ஆலோசித்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்/ முதன்மைச் செயலாளர்/ சுகாதார செயலாளர்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட 4-வது கட்ட தேசிய செரோ பரவல் ஆய்வுகளின் முடிவுகளை மேற்கோள்காட்டி, நிலையான நெறிமுறைகளை இதுபோன்ற ஆய்வுகளில் மேற்கொண்டு, கொவிட்-19 தொற்றுக்கு எதிராக ஆதாரங்களின் அடிப்படையிலான பொது மருத்துவ நடவடிக்கையை வெளிப்படையாக மேற்கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த ஆய்வுகளின் முடிவுகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் ஆலோசித்து இந்த ஆய்வுகளை தங்களது மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியாவின் 70 மாவட்டங்களில் அண்மையில் தேசிய செரோ ஆய்வை மேற்கொண்டது.

தேசிய அளவில் கொவிட் தொற்றின்  பரவலை கண்டறிவதற்காக தேசிய ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வடிவமைத்தது. இந்த ஆய்வு முடிவுகள் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் இடையேயும் செரோ பரவலின் பன்முகதன்மையை பிரதிபலிக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா