ஜக்கி வாசுதேவ், முன் பதிவிட்ட, 'மண்புழு ஓர் ஹிந்து' எனும் டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்த தமிழ்நாடு நிதியமைச்சர்

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட, 'மண்புழு ஓர் ஹிந்து' எனும் டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்த அவரை  தமிழ்நாடு நிதியமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன்.
 2015 ஆம் ஆண்டு, சத்குரு எனும்  டுவிட்டரில், 'ஹிந்து என்பது புவியியல் அடையாளம். ஒரு யானை ஆப்ரிக்காவில் இருந்தால், அது ஆப்ரிக்கன். இந்த நிலத்தில் (இந்தியா) ஒரு மண் புழு இருந்தால், அது ஹிந்து' என, பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை தற்போது பகிர்ந்து, பதிலளித்துள்ள அமைச்சர் தியாகராஜன், 'ஆப்ரிக்கா ஒரு கண்டம், இந்தியா ஒரு நாடு, குடியரசு (நிலம் என்பது இங்கு இந்தியாவைக் குறிக்கிறது).

இந்து என்பது மதம், நம்பிக்கை. யானை என்பது முதுகெலும்புள்ள பாலுாட்டி, மண்புழு முதுகெலும்பற்றது, நிலத்தில் வாழக்கூடியது. அதுபோல, 'சார்லடன்' என்பதற்கு, தன்னிடம் இல்லாத சிறப்பு அறிவையோ, திறமையையோ இருப்பதாக போலியாகக் கூறிக்கொள்ளும் பகட்டுக்காரர் எனப் பொருள். பன்முக பகட்டுக்காரர்' என, குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர் டாக்டர்பழனிவேல் பழனிவேல் தியாகராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா