முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா மற்றும் காம்பியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் காம்பியா குடியரசு இடையே,




பணியாளர் நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை புதுப்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்






16 மாநில கிராமங்களில் பாரத் நெட்  திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

16 மாநிலங்களில் உள்ள கிராமங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் மாற்றியைமக்கப்பட்ட பாரத் நெட் திட்ட உத்தியை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


மக்கள் குடியிருக்கும் அனைத்து கிராமங்களிலும், பாரத் நெட் திட்டம் நீட்டிக்கப்படும்.  இந்த மாற்றியமைக்கப்பட்ட உத்தியில், சர்வதேச ஏலப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் பாரத் நெட்  திட்டத்தை  செயல்படுத்தும்.  இதில் கண்ணாடியிழை கேபிள் மூலம் இணையதள இணைப்பு வழங்கப்படும்.  பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கு ரூ.19,041 கோடி மானியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3.61 லட்சம் கிராமங்களில் இணையதள இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் உள்ள கிராமங்களிலும் பாரத் நெட் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் உத்திரவாத திட்டம்:

கொரோனா 2ம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளுக்கு கடன் உத்திரவாத திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புதிய திட்டங்கள் மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு ரூ.50,000 கோடி வரை நிதி உத்திரவாதம் வழங்கப்படும்.

மேலும், அவசரகால கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ், ரூ.1,50,000 கோடி வரை கூடுதல் நிதியளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இத்திட்டம், 2022, மார்ச் 31ம் தேதி வரை அனுமதிக்கப்பட்ட தகுதியான கடன்கள் அல்லது ரூ.50,000 கோடி வரை அனுமதிக்கப்பட்ட கடன்கள், இதில் எது முன்போ  அதற்கு இந்த திட்டம் பொருந்தும்.

அவசரகால கடன் உத்திரவாத திட்டம் தொடரும் திட்டம் ஆகும். இது 30.09.2021 வரை வழங்கப்பட்ட உத்திரவாத அவசரகால கடன் திட்டம் அல்லது இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி, இதில் எது முன்போ அதற்கு இத்திட்டம் பொருந்தும்.

இந்த திட்டங்கள், நாட்டில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

தற்சார்பு இந்தியா வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவுக்கான கடைசி தேதி நீட்டிப்பு:

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (ABRY) பயன்களை பெறும் பயனாளிகள் பதிவு செய்வதற்கான  கடைசி தேதியை 2021 ஜூன் 30ம் தேதியிலிருந்து, 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நீட்டிப்பு மூலம், முறைசார்ந்த  தொழில் துறையில்  71.8 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 79,577 நிறுவனங்கள் மூலம் 21.42 லட்சம் பயனாளிகளுக்கு 18.06.2021-ம் தேதி வரை ரூ.902 கோடி வழங்கப்பட்டுள்ளது. பதிவுக் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் செலவு ரூ.22,098 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வேலை அளிக்கும் நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைக்க இபிஎப்ஓ மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அனுமதி:  

இந்தியா மற்றும் காம்பியா  குடியரசு இடையே, பணியாளர் நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை புதுப்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய பணியாளர் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் காம்பியா குடியரசு நாட்டின் பொதுச் சேவை ஆணையம் கையெழுத்திடுகிறது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பணியாளர் நிர்வாகத்தை புரிந்து கொள்ளவும், நிர்வாக முறையை மேம்படுத்தவும் உதவும்.

சுகாதாரத்துறை ஆராய்ச்சியில் இந்தியா மற்றும் மியான்மர் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மியான்மர் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கையெழுத்திட்டன. இரு நாடுகள் இடையே சுகாதார ஆராய்ச்சி உறவை மேம்படுத்துவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

சுகாதார ஆராய்ச்சி துறையில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நேபாள சுகாதார ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி மற்றும் இந்தாண்டு ஜனவரி 4ம் தேதி கையெழுத்திட்டன. கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இரு நாடுகளில் நிலவும் சுகாதார பிரச்சினைகள், ஆயுர்வேதம்/பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகைகள், தொற்று அற்ற நோய்கள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...