கார்கில் வெற்றி தினத்தில், பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை

பாதுகாப்பு அமைச்சகம் கார்கில் வெற்றி தினத்தில், பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை

கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர்.

1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார்.

அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்.  அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.பிரதமர் அலுவலகம்

கார்கில் வெற்றி நாளில், தமது இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

பிரதமர் திரு.நரேந்திர மோடி, தேசத்தை காக்கும் பணியில் கார்கிலில் தமது இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு, கார்கில் வெற்றி நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ நாம் அவர்களது தியாகத்தை நினைவு கூர்கிறோம். நாம் அவர்களது வீரத்தை நினைவு கூர்கிறோம். தேசத்தை காக்கும் பணியில், கார்கிலில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்கும், கார்கில் வெற்றி நாளான இன்று நாம் அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களது துணிவு ஒவ்வொரு நாளும் நமக்கு உத்வேகம் ஊட்டுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறியவற்றை இங்கு பகிர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தில், பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை

கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர்.

1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார்.

அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்.  அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.உள்துறை அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கார்கில் போரில் பங்குபெற்ற துணிச்சல் நிறைந்த அனைத்து வீரர்களையும் தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் நினைவுக் கூர்ந்துள்ள அவர், “உங்களது ஈடு இணையில்லா வீரம், துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவை கார்கிலின் அணுகமுடியாத மற்றும் சவால் மிகுந்த உயரங்களில் மூவர்ண கொடியை மீண்டும் வெற்றிகரமாக பறக்க வைத்தன,” என்று குறிப்பிட்டார்.

“நாட்டின் பெருமையை தக்க வைத்த உங்களின் அர்பணிப்புக்கு நாடு நன்றியுடன் தலை வணங்குகிறது,” என்று அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.             பாதுகாப்பு அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தில், தேசிய போர் நினைவு சின்னத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மரியாதை

கார்கில் வெற்றியின் 22வது ஆண்டு தினத்தில் தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று(ஜூலை 26ம் தேதி)  நன்றி தெரிவித்தார்.  கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் மோதலில், ஆபரேஷன் விஜய் நடவடிக்கையின் போது நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசிய போர் நினைவிடத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில், திரு ராஜ்நாத் சிங் குறிப்பிடுகையில், ‘‘ இந்திய பாதுகாப்பு படையினரின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறவாது’’ என்றார். அவர்களின் வீரத்துக்கு நாடு நன்றியுடன் எப்போதும் கடன்பட்டுள்ளது, அவர்களின் கொள்கைகளை நாடு எப்போதும் பின்பற்றும் என அவர் மேலும் கூறினார். 

இது குறித்து சுட்டுரையில் கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர், ‘‘ தைரியமான வீரர்களின் உன்னத தியாகம், வரும் தலைமுறையினரையும் ஊக்குவிக்கும்’’ என  கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா, ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை  தலைவர் வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் ஆகியோர் தேசிய போர்வீரர் நினைவு சின்னத்தில் உயிர்நீத்த வீரர்களுக்காக மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.

கார்கில் மோதலில், இந்திய ராணுவ வீரர்கள், விமானப்படை உதவியுடன், கார்கில் மலைப் பகுதியில் மோசமான வானிலையிலும் எதிரிகளுடன் சண்டையிட்டு விரட்டியடித்தனர்.  இந்த முக்கியமான தருணத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கார்கில் வெற்றியை கொண்டாடி, உயிர்நீத்த வீரர்களை பெருமை மிக்க நாடு நினைவுக்கூர்கிறது.பாதுகாப்பு அமைச்சகம்

அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது

1999-ல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியை குறிக்கும் விதமாக பிர்ச்குன்ஜ் ராணுவ மையத்தில் 2021 ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கொண்டாடப்பட்டது.

அந்தமான் & நிக்கோபார் பிரிவின் அனைத்து கூறுகளை சேர்ந்த கூட்டுப்பணியினர், கார்கில் போரில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாதுகாப்பு படைகளின் பாரம்பரியத்தை காத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அந்தமான் & நிக்கோபார் பிரிவின் தளபதி, லெப்டினெண்ட் ஜெனரல் அஜய் சிங் மலரஞ்சலி செலுத்தினார். அந்தமான் & நிக்கோபார் தீவுகளை சேர்ந்த முன்னாள் படை வீரர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

படையினரிடையே உரையாடிய அந்தமான் & நிக்கோபார் பிரிவின் தளபதி, அனைத்து நேரங்களிலும் தயாராக இருந்து இணைந்து செயலாற்றுமாறும், இதன் மூலம் களத்தில் நன்மைகள் விளையும் என்றும் கூறினார். கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா