தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு

புவி அறிவியல் அமைச்சகம் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை முதல்  அதிக கனமழைக்கு வாய்ப்பு


தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைத்துறை கூறியுள்ளது.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, குஜராத் பிராந்தியம், மத்திய மகாராஷ்டிரா, கடலோர ஆந்திரா,  ஏனாம், தெலுங்கானா, கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா, கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், பீகார், துணை இமயமலை மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சவுராஷ்டிரா, கட்ச், மராத்வாடா, ராயலசீமா, வடக்கு உள் கர்நாடகா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். 

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி,  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தெலுங்கானா, ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், விதர்பா, பீகார், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.   மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில்  மழை பெய்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சில நாட்களாக கோடை வெயில் கொளுத்திய நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. குற்றாலத்தில்  2 நாட்களாக பகல்  முழுவதும் வெய்யிலின்றி இதமான காற்று வீசுவதுடன் அவ்வப்போது சாரல் மழை பொழிவது. காரணமாக அருவிகளுக்குத் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில்   தண்ணீர் அதிகம் விழுகிறது.


ஐந்தருவியில்  5 பிரிவுகளிலும் தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவி,  புலியருவி, சிற்றருவிகளில்  தண்ணீர் நன்றாக விழுந்த போதும் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள்  குளிக்கத் தடை நீடிக்கிறது.  இதனிடையே வெளியூர்களிலிருந்து குற்றாலம் வரும்  சுற்றுலாப் பயணிகள், குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து  ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

பாபநாசம் அணைப் பகுதியில் 12 மிமீ மழையும். கொடுமுடியாறு அணை பகுதியில் 15 மிமீ, சேர்வலாறில் 1 மிமீ, களக்காடு பகுதியில் 2.2, மிமீ, ராதாபுரம் வட்டாரத்தில் 31 மிமீ, அம்பாசமுத்திரத்தில் 2 மிமீ மழை பதிவானது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 116.30 அடியாக உள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 1,287.35 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 1,404 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 76.55 அடியாக உள்ளது. அணைக்கு 46 கனஅடி நீர் வருகிறது. 250 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.  தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி பகுதியில் 16 மிமீ மழை, சிவகிரியில் 13 மிமீ, அடவிநயினார் அணைப் பகுதியில் 30 மிமீ, கருப்பாநதியில் 9 மிமீ, குண்டாறில் 7 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது. செங்கோட்டையில் 3 மிமீயும், தென்காசியில் 2.6 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதனிடையே திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா