முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செட்டிநாடென்பது எப்படி.வட்டார வழக்கு கலாச்சாரம் கொண்ட பகுதியோ அதுபோலவே கொங்கு என்பது கலாச்சாரம் அது நாடல்ல

தமிழ்நாட்டில் செட்டிநாடென்பது எப்படி ஒரு இராஜாவால் ஆளுமை இல்லாத வட்டார வழக்கு மொழி பழக்கவழக்கங்கள் அல்லது கலாச்சாரம் கொண்ட பகுதியோ அதுபோலவே கொங்கு நாடும் அதன் வட்டார வழக்கு கலாச்சாரம் கொண்ட பகுதியாகும். 


    இது சேர,சோழ, பாண்டிய, பல்லவர் ஆளுமை கொண்டவர் ஆட்சியில் இருந்ததல்ல பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அரசர்களின் பிரிவினை காரணமாக வட்டார வழக்கு மொழிப் பிரிவின் படி வந்த நிகழ்வு. கொங்கு வேளாளர் எனும் கவுண்டர் ஜாதிய மக்களைக் குறிக்கும் ஒரு பகுதியாக அல்லது மண்டலமாக பெயர் வழங்கப்பட்டது.

கொங்கு நாடு என வந்த வட்டார பேச்சு தமிழ் மொழி வழக்காக வந்தது இங்கு பெரும்பாலும் இவர்களுக்கு இணையான அதிகம் வாழும் அருந்தியர் இனக்குழு கன்னடம்  பேசும் மக்கள் கர்நாடக எல்லையில். வாழ்ந்த மக்கள்      சோழர் ஆட்சியில் தமிழ் உச்சரிப்பு காரணமாக கொங்கு மண்டலமென பகுதி பிரித்து வழங்கப்பட்டது.  பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். கொங்கு பகுதியை அதிராச மண்டலம் என்று பெயரிட்டு கொங்காள்வான் வழி சிற்றரசர்கள் ஆண்டானர். 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு தோன்றியது. இதனை உரையாசிரியர் காலமென்பர். கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டுப் பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். ஏழாம்  நூற்றாண்டில் இப்பிரிவிருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு கொங்கு பகுதியை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. விஜயநகர நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்தாண்டனர். ஊர்த்தலைவர்கள் பெயரால் ஊர்கள் அமைந்தன. தற்கால அமைப்புப்படி  சுதந்திர காலத்திற்கு முன் கோயமுத்தூர், சேலம், கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு என அதிலடங்கியிருந்தன ஒரத்தநாடு துவங்கி பாப்பா நாடு வரை 48 தன்னாட்சி கள்ளர் நாடுகள் உள்ளது போல 24  தன்னாட்சி நாடுகளாக கொங்கு பகுதியில் அமைந்துள்ள பாளையம் என்னும் பெயர்



பூந்துறை நாடு, தென்கரை நாடு,                காங்கேய நாடு, பொங்கலூர் நாடு,          ஆரை நாடு, வரக்கா நாடு,                            திருஆவினன்குடி நாடு, மணநாடு,              தலையூர் நாடு,  தட்டயூர் நாடு,                      பூவாணிய நாடு, அரைய நாடு,                    ஒடுவங்கநாடு, வடகரைநாடு,                        கிழங்கு நாடு,  நல்லுருக்கா நாடு,             வாழவந்தி நாடு, அண்ட நாடு,                      கொங்கால நாடு, காவழக்கால நாடு, ஆனைமலை நாடு, இராசிபுர நாடு,             கஞ்சிக் கோயில் நாடு ,குறும்பு நாடு  எனவும் இவை அனைத்தும்       



    

மலைகளும் கோட்டைகளும் சுழ அமைப்புக் கொண்ட                       ஒதியமலை, குருந்தமலை                       சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,                                                          பாலமலை,  பெருமாள் மலை,                    ஆனைமலை, பொன்மலை,திருமூர்த்தி மலை, தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை,                          ஊதியூர்மலை, சிவன் மலை,                      சென்னிமலை, பெருமாள் மலை,             தவளகிரி, குன்றத்தூர்,                       பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை,    மாதேசுவரன் மலை, மோரூர்  மலை,          கொங்கணமலை, கொல்லிமலை,              சேர்வராயன் மலை,  கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை                  தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை,  ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.    உள்ளிட்ட பல மலைகளுமுள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு,காங்கேயம், கரூர், விஜயமங்கலம்,அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர்,   நெருஞ்சிப் பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி , காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம்,பெரும்பாலை,சோழப்பாவு,தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300 அடி உயரத்திலும், சங்ககிரி - 1500 அடி உயரத்திலும், சதுரகிரி - 3048 அடி உயரத்திலும், கனககிரி - 3423 அடி உயரத்திலும், மகாராசக்கடை - 3383  அடி உயரத்திலும், தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி உயரத்திலும். இரத்தினகிரி - 2800 அடி உயரத்திலும், சூலகிரி - 2981 அடி உயரத்திலும், அமைந்துள்ளது  கொங்கு பகுதியில் கோட்டைகளாம். 

14  ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகளிருந்தன. இவர்கள் தமிழ் மொழி பேசும் நிலையில்  கொங்குத் தமிழ் அல்லது கோயம்புத்தூர் தமிழ் என்பது பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். இவ்வட்டார வழக்கு மொழியை கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தின் வட பகுதி மாவட்டங்களில் வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது. இவ்வழக்கு இதற்கு முன்பு ”காங்கி” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

கொங்கு என்ற சொல்லுக்குத் கங்க என்பது பொருள். எனவே கங்கர் பேசும் மொழியாதலால், காங்கி எனப்பெயர்பெற்றது என சொல்லப்படுகிறது. இம்மொழிக்கு சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் தான் கொங்குத் தமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது. அதற்கு முன் அவ்வாறு பெயர் இல்லை.மேலும் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொங்கு நாடு எனவும் அப்போது தான் அழைத்தனர்.

தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, "தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்கிட்டு' என்று கூறுவார்கள். இதையே மரியாதை என்று அவர்கள் கூறினர் கொங்கு தமிழ். என்றனர் ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் 'ங்கோ' போட்டுப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் செற்றொடரை முழுமையாக முடிக்காமல் பேசுவார்கள். முழுமையாக முடிக்காமலா சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று 'கோ' வை சொல்லாமல் மொழியை பேச்சில் பாதி விழுங்கி விடுவார்கள். எப்படி பேச்சு வழக்கில் சமஸ்கிருதம் தமிழ் மொழி கலப்பு வந்தது எனப் பார்த்தால்   சமஸ்கிருதமாக்கப்பட்ட 

தமிழ்ச் சொற்கள். பல இன்றும் ஆங்கிலக் கலப்பு தமிழ் மொழி பேசுவோர் போல தமிழில் சமஸ்கிருதம் கலந்த நிகழ்வுண்டு. பூவை புஷ்பமாக்கி, அழகை சுந்தராக்கி, முடியை கேசமாக்கி, தீயை அக்னியாக்கி, காற்றை வாயுவாக்கி, பிணத்தை சவமாக்கி, கெட்டதை பாவமாக்கி, முகத்தை வதனமாக்கி, அறிவைப் புத்தியாக்கி, அவையை சபையாக்கி, ஆசானைக் குருவாக்கி, இசையை சங்கீதமாக்கி, குண்டத்தை யாகமாக்கி, பெரியதை மஹாவாக்கி, மக்களை ஜனங்களாக்கி, நிலத்தை பூலோகமாக்கி, அமிழ்தை  அமிர்தமாக்கி, அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி, ஆடையை வஸ்திரமாக்கி, உணவை போஜனமாக்கி, உணர்வற்றதை ஜடமாக்கி, ஓவியத்தை சித்திரமாக்கி, கலையை சாஸ்திரமாக்கி, விண்ணை ஆகாயமாக்கி, குளியலை ஸ்நானமாக்கித், தொழுதலை பூஜையாக்கி, தண்ணீரைத் தீர்த்தமாக்கி, மாணவனை சிஷ்யனாக்கி, வேண்டுதலை பிராத்தனையாக்கி, முறைகளை ஆச்சாரமாக்கி, பத்தாம் நாளை தசமியாக்கி, திருவிழாவை உற்சவமாக்கி, பருவமடைதலை ருதுவாக்கி, உறக்கத்தை நித்திரையாக்கி, திருமணத்தை விவாகமாக்கி, பயணத்தை யாத்திரையாக்கி, செருப்பை பாதரட்ஷையாக்கி, படையலை நைவய்தியமாக்கி, பள்ளிகளை வித்யாலயமாக்கி, பிள்ளைப்பேறை பிரசவமாக்கி, வணக்கத்தை நமஸ்காரமாக்கி, அன்பளிப்பை தட்ஷணையாக்கி, ஒன்பதாம் நாளை நவமியாக்கி, அறிவியலை விஞ்ஞானமாக்கி, படிப்பித்தலை அப்பியாசமாக்கி, கருவறையை கர்ப்பகிரகமாக்கி, வேளாண்மையை விவசாயமாக்கி, குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி, எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்துள்ளன

அனைத்து இடங்களிலும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த பலர் மறந்து ஆங்கிலம் தான் பேச அதற்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் என கேட்கும் நிலையில் 

தாய்மொழியாம் தமிழ் மொழியைப் பேணுவோம் கொங்கு என்பது ஒரு நாடல்ல வட்டார வழக்கு மொழி இன கலாசாரப் பகுதி என்பதே.ஒரு நாளிதழ் இன்று தனது செய்தி பிரசுரித்த மொழி வாரியாக பிரிக்க தமிழகத்தின் கொங்கு வட்டார வழக்கு மொழி பிரதேசம் குறித்து வந்த செய்தி பிரிவினைக்கு வழி வகுக்கும் செயல் அதை தமிழ் மொழி பேசும் யாவரும் ஆதரிக்கத் கூடாது என்பதே தமிழறிஞர்கள் பலர் கருத்து.பஞ்சாபில் காலிஸ்தான்,,மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து, அசாமில்  போடோலாந்து, மகாராஷ்ட்ராவை பிரித்து விதர்பா,

உத்திரபிரதேசத்தைப் பிரித்து பூர்வாஞ்சல்,, ஹரித்பிரதேசம் உருவாக்க வேண்டுமென்ற தனி மாநில கோரிக்கைகளை முன்வைப்போர் எல்லாம் பிரிவினைவாதிகளாக ,தீவிரவாதிகளாக அந்தந்த மாநில அரசுகளால் அடையாளம் காணப்பட்டு எக்கசக்கமான வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆகவே.

தமிழகஅரசும் மற்ற மாநில அரசுகளைப் போல கருணையோ. இரக்கமோ காட்டாமல். தமிழகத்தில் பிரிவினை வாதக் கோரிக்கை வைப்போரின் மீது நடவடிக்கை வரவேண்டும் என்பதே  பல தமிழகத்த் தலைவர்கள் கருத்து.              பலர் தமிழகத்தில் இந்தத் தலைமுறையில் தமிழில் பெயர் வைப்பது கூடக் குறைகிறது காரணம் அதை நாகரீகமென நினைக்கும் மக்கள் தற்போது வைக்கும் பெயர்களை அவர்கள் அதற்கு அர்த்தம் தெரியாமல் வைக்கும் நிலை அதிகரித்துள்ளது அதில் சில  யாஷிஹா ,கோபிஹா,தர்ஷினி,மஹிஷா,கேஷவ்,கிருஷ், அபர்ணா,நித்ரா, இப்படி பல இதன் உண்மையான அர்த்தம் தெரிந்தால் அவர்கள் வைக்கமாட்டார்கள்.ஆனால் பல நியூமராலஜி ஜோதிடர்கள் அதன் அர்த்தம் சொல்வதில்லை நல்ல தமிழ் பெயர் வைத்த நிகழ்வு தற்போது மாற்றம் பெற கலாச்சாரம்     சீர்கெட்டதே காரணமாகும்  அதே போல் தான் வட்டார வழக்கு கொண்ட ஒரு பகுதியை நாடு என அழைக்கப்படும் நிலை வரலாறு அறியாத தலைமுறைக்கு  இது பதிவாகியுள்ளது. ஆனால் இதை வரலாற்று அறிஞர்கள் ஏற்கவில்லை, ரசிக்கவில்லை. என்பதே உண்மை.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த