வாக்களிக்கப் பணம் தெலங்கானா மாநில பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை

தேர்தலில் வாக்களிக்கப் பணம் தெலங்கானா மாநில பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை


 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கப் பணம் அளித்த குற்றச்சாட்டில் தெலங்கானா மாநில பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு  விசாரணை நடத்திய மாநில சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்தவர் மாலோதி கவிதா. இவர்  2019 ஆம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநிலம் மெஹபூ பாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தேர்தலின் போது

மாலோத் கவிதாவுக்கு வாக்களிக்குமாறு பத்ராத்ரி- கொத்தகூடம் மாவட்டத்தில் டி  ஆர் எஸ் கட்சித் தொண்டர் ஒருவர் பொதுமக்களுக்குப் பணமளித்தார். அவரை அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததை யடுத்து, வாக்களிக்கப் பணம் அளிக்கப்பட் டது தொடர்பாக மாலோத் கவிதா மற் றும் அந்தத் தொண் டர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தலில் மாலோத் கவிதா வெற்றி பெற்றதையடுத்து அந்த வழக்கு ஹைதராபாத்திலுள்ள தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்றுவந்த நிலையில் மாலோத் கவிதா

மீதான குற்றச்சாட்டை விசாரணைக்குப் பிறகு சனிக்கிழமை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூபாய்.10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

எனினும் தனக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாலோத் கவிதா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா