முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம்

காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.  வெற்றியூர்  ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1,411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன.  சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக , வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா, மதர் சிறப்புப் பள்ளி, நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரியர், இளமாறன் வெற்றியூர். பத்மநாபன், கல்லல் ஜிம் பாலமுருகன், அப்பல்லோ மருந்தகம், கல்லல் மற்றும் வெற்றியூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்  நிகழ்ச்சியை சமூக சிந்தனையாளர் பிரபாகரன், அப்துல் கலாம் லட்சிய இந்தியா, சார்பில் ஒருங்கிணைப்பு செய்து நன்றி கூறினார். மரக்கன்றுகள் நடப்பட்டது. அதேபோல் காரைக்குடியில் அனைத்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் இன்று காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த திரு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மதுசூதன் ரெட்டி  மரக்கன்றை நட்டு விழாவைத் துவக்கி வைத்தார் விழாவில் வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை