சாலையில் கண்ட செல்லுலர் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆரம்பப்பள்ளி மாணவருக்கு அமைச்சர் பாராட்டு

 பொன்னமராவதி  ஜெ.ஜெ.நகரில் சாலையில் கண்ட செல்லுலர் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆரம்பப்பள்ளி மாணவர் பிரகாஷ்ராஜுக்கு அமைச்சர் பாராட்டுபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் தார் சாலையில் ஜூலை 8 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் அந்த வழியாக ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த 4 ஆம் வகுப்பு பயிலும்  மாணவன் பிரகாஷ்ராஜ் இவர் பொன்னமராவதி பிரபலமான செய்தியாளர் கீரவாணி இளையராஜா மகனாவார் இவர் சாலையில்  செல்லுலர் போன் கிடப்பதைப் பார்த்து.  நூலிடையில் உயிரை பனையம் வைத்து எதிரே வந்த லாரியை வழிமறித்து செல்போன் உடையாத நிலையில் மீட்டு செல்லுலர் போனை உரியவரிடம் ஒப்படைக்கும் பொருட்டு பொன்னமராவதி பேரூராட்சி காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் தனபாலனிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிறிய வயதில் நான்காம் வகுப்பு படிக்கும்


பிரகாஷ்ராஜின் நற்செயலைக் கண்டு வியந்த  பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் தனபாலன் உள்ளிட்ட சக காவலர்கள் சிறுவனை பாராட்டினர். மேலும் ஒப்படைக்கப்பட்ட செல்லுலர் போன் தவறவிட்ட உரியவரான நெற்குப்பை அரசுப் பள்ளியின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாலையில் கிடந்த செல்போனை காவல்துறையிடம் ஒப்படைத்த மாணவர் குறித்து அறிந்து தமிழக சட்டம் நீதி மற்றும் ஊழல்கள் தடுப்பு கண்காணிப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாணவர் பிரகாஷ் ராஜ் அவரது தந்தை இளையராஜாவுடன் அழைத்து பாராட்டியதுடன் பரிசும் வழங்கினார். நல்ல பிள்ளை நாமும் வாழ்த்துவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா