பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

குடியரசுத் தலைவர் செயலகம்

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு


இந்திய குடியரசு தலைவர், கீழ்க்காணும் நியமனங்கள்/ மாற்றங்களை அறிவித்துள்ளார்.

I.        மிசோரம் ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, கோவா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

II.       ஹரியானா ஆளுநர் திரு சத்யதேவ் நாராயண் ஆர்யா, திரிபுரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

III.      திரிபுரா ஆளுநர் திரு ரமேஷ் பெய்ஸ், ஜார்கண்ட் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

IV.     திரு தாவர்சந்த் கெலாட், கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

V.      இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரயா, ஹரியானா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

VI.     மிசோரம் ஆளுநராக டாக்டர் ஹரி பாபு கம்பம்படி நியமிக்கப்பட்டுள்ளார்.

VII.    மத்தியப் பிரதேச ஆளுநராக திரு மங்குபாய் சக்கன்பாய் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

VIII.   இமாச்சலப் பிரதேச ஆளுநராக திரு ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் குறிப்பிட்ட நியமனங்கள், அவர்கள் தத்தமது பொறுப்புகளை ஏற்கும் நாள் முதல் அமலுக்கு வரும்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 06 ஜூலை2021 ல் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும். ஏற்கனவே பதவியிலிருக்கும் சில ஆளுநர்களையும் இடம் மாற்றி உத்தரவு  மத்திய சமூகநீதித்துறை அமைச்சராக இருந்த தவார்ச்சந்த் கெஹ்லோட், கர்நாடக ஆளுநராகவும்

மிசோரத்தின் ஆளுநராக டாக்டர் ஹரி பாபு கம்பம்பதியும், மத்தியப் பிரதேச ஆளுநராக மங்குபாய் சாகன்பாய் படேலும், இமாச்சலப் பிரதேச ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மிசோரம் மாநில ஆளுநராக பணியாற்றிவந்த ஸ்ரீதரன் பிள்ளை, கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநில ஆளுநராக இருந்துவந்த சத்யதேவ் நாராயண் ஆர்யாவை திரிபுராவின் ஆளுநராக நியமித்துள்ள குடியரசுத் தலைவர், திரிபுராவின் ஆளுநராக இருந்துவந்த ரமேஷ் பைஸை ஜார்க்கண்ட்டின் ஆளுநராக நியமித்துள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்துவரும் பண்டாரு தத்தாத்ரயா, ஹரியானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.குடியரசுத் தலைவர் செயலகம் மேலும் வெளியிட்ட தகவலின்படி

நான்கு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத் தலைவரிடம் காணொலி மூலம் வழங்கினர்

கொலம்பியா குடியரசு, உருகுவே, ஜமைக்கா மற்றும் அர்மேனிய குடியரசின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்திடம்  காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று வழங்கினர்.

அவர்களின் விவரம் பின்வருமாறு:

1. மேன்மைமிகு திருமிகு மரியானா பச்சேக்கோ மோன்டஸ், கொலம்பிய குடியரசின் தூதர்

2. மேன்மைமிகு திரு ஆல்பர்டோ அண்டனியோ குவானி அமரில்லா, உருகுவே தூதர்

3. மேன்மைமிகு திரு ஜேசன் கீட்ஸ் மாத்யூ ஹால், ஜமைக்கா தூதர்

4. மேன்மைமிகு திரு யூரி பாபாகன்யான், அர்மேனிய குடியரசின் தூதர்

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அனைத்து நாடுகளுடனும் இந்தியா நட்புறவை பேணி வருவதாக தெரிவித்த அவர், அமைதி மற்றும் வளம் எனும் பொதுவான இலட்சியத்தின் அடிப்படையில் நமது உறவுகள் அமைந்துள்ளன என்றார்.

ஒட்டுமொத்த சுகாதார மற்றும் பொருளாதார நலனை உறுதி செய்வதற்காக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகளின் முன்னணியில் இந்தியா இருப்பதாக குடியரசு தலைவர் திரு கோவிந்த் கூறினார்.

உலகின் மருந்தகமமாக திகழும் இந்தியா, கொவிட்டுக்கு புதிரான உலகின் போரில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பல்வேறு நாடுகளுக்கு வழங்கியதாக தெரிவித்தார்.

தங்களது தலைவர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த தூதர்கள், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து பணிபுரிய உறுதி பூண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா