மத்திய உள்துறை அமைச்சர் சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர்

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை சந்தித்த மத்திய இணையமைச்சர் திரு. எல் முருகன்


மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல் முருகன் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை இன்று சந்தித்தார்.

கடந்த ஜூலை 7ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த திரு. எல் முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகங்களின் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இணை அமைச்சர் திரு எல் முருகன் இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷாவை


புதுதில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா