பள்ளிக் கல்வித்துறை திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது .

முதல் வகுப்பு துவங்கி 12 ஆம் வகுப்பு வரை (பிளஸ் 2 )வரை பிழை திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே தேர்வுக்குத் தயாராக ஏதுவாக பொதிகை மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் பத்தாம் வகுப்பு பாடங்கள் காணொலிகளாக

தயாரிக்கப்பட்டு தினமும்ஒளிபரப்பு செய்யப்படுகின்றதையடுத்து இதர வகுப்பு மாணவர்களின் நலன்கருதி 1 முதல் பிளஸ் 2 வரை பிழை திருத்தப்பட்ட பாடநூல்கள் பள்ளிக்கல்வி இணையதளத்தில் (tnschools.gov.in/textbooks) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் படிக்கலாம்.

 சிபிஎஸ்இ மாண வர்களும் தங்கள் புத்தகங்களை epathshala.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி, எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கான மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். சிறுபான்மை அந்தஸ்து பெறாத,தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளியிலும், இந்த திட்டம் அமலில் உள்ளது.

அதாவது தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பாக உள்ள எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு, அரசின் சார்பில் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும்.நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவங்கின.

பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கான, 25 சதவீத இடங்களின் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம், நேற்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. வரும், 5ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. இதையொட்டி, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விபரங்களை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பாக, மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் மொபைல் போன் எண்கள், rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் தகவல் தேவைப்படுவோர், அந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.                          FREE ONLINE CLASSES 

✅ 10, 11th &12th Standard All Subject Free Online Class and Free Motivational Speech by Kalvi Ulagam https://news.kalvikadal.in/2021/06/free-online-classes-for-students-for.html

✅ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு https://news.kalvikadal.in/2021/06/one-of-the-oppurtunity-for-nineth-and-tenth-students.html

✅ 10th , 11th & 12th Standard All Subjects Free Online Classes by Victory Online Academy https://news.kalvikadal.in/2021/06/10th-11th-12th-standard-free-online.html.          🔘 1st STD https://bit.ly/3boo1ev

🔘 2nd STD https://bit.ly/3fsXArM

🔘 3rd STD https://bit.ly/3vz1mp8

🔘 4th STD https://bit.ly/3yN2pnh

🔘 5th STD https://bit.ly/34pdtsW

🔘 6th STD https://bit.ly/3fsDy0u

🔘7th STD https://bit.ly/3fS3iCy

🔘 8th STD https://bit.ly/3fZlhai

🔘 9th STD https://bit.ly/2SEmxr2

🔘 10th STD https://bit.ly/3uz5uUJ

🔘 11th STD https://bit.ly/3yKbRb3

🔘 12th STD https://bit.ly/3fwvL1z

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா