வாகோ இந்தியா கிக்பாக்சிங் கூட்டமைப்புக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அரசு அங்கீகாரம்


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வாகோ இந்தியா கிக்பாக்சிங் கூட்டமைப்புக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு எனும் அரசு அங்கீகாரம் கிடைத்தது


கிக்பாக்சிங் எனும் குத்துச்சண்டை விளையாட்டை இந்தியாவில் ஊக்கப்படுத்தி வளர்க்கும் விதமாக, வாகோ இந்தியா கிக்பாக்சிங் கூட்டமைப்புக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு எனும் அங்கீகாரத்தை வழங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

கிக்பாக்சிங் அமைப்புகளின் சர்வதேச சங்கத்திடம் வாகோ இந்தியா கிக்பாக்சிங் கூட்டமைப்பு பதிவு பெற்றுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு பிரிவின் முழு அங்கீகாரம் பெற்ற உறுப்பினராக வாகோவை உருவாக்குவதற்கான பரிந்துரைக்கு 2021 ஜூன் 10 அன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்தது.

2019 நவம்பர் 30 முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தற்காலிக உறுப்பினராக வாகோ இருக்கிறது. முழு அங்கீகாரம் குறித்து 2021 ஜூலை டோக்கியோவில் நடைபெற்றவுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். ஒலிம்பிக் இயக்கத்தின் முழு அங்கீகாரம் பெறுவது கிக்பாக்சிங் விளையாட்டின் வளர்ச்சிக்கு அவசியமாகும்.

வாகோ இந்தியா கிக்பாக்சிங் கூட்டமைப்புக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு எனும் அங்கீகாரத்தை வழங்க அரசு முடிவெடுத்திருப்பதன் காரணமாக, நாட்டில் கிக்பாக்சிங் விளையாட்டு வேகமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா