ஒலிம்பிக் முதல் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் பாராட்டு

பிரதமர் அலுவலகம்  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் பாராட்டு


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-ற்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான துவக்கத்தை கோரியிருக்க முடியாது. மீராபாய் சானுவின் மாபெரும் செயல்திறனால் இந்தியா குதூகலம் அடைந்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது.   #Cheer4India #Tokyo2020”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில்.  குறிப்பிட்டுள்ளார்.                தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஜீஹுய் ஹூ ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை பதக்கம் வென்ற அவரை நாடு திரும்ப வேண்டாம் எனக்கூறியுள்ள ஒலிம்பிக் அமைப்பு, அவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஒருவேளை அவர் அந்த பரிசோதனை தோல்வியடைந்தால், ஒலிம்பிக் விதியின் படி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள மீரா பாய்-க்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்

டோக்கியோ ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை சுமார் 5,000 வீரர்களுக்கு போட்டிக்கு முன்னதாகவும், போட்டிகள் முடிந்த பின்னரும் வழக்கமான முறையில் ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது. அதில் ஒருவர் தான் சீன வீராங்கனை ஜீஹுய் ஹூவும் ஒருவர். எனவே அவருக்கு ஊக்கமருந்து பரிசோதனையில் பாசிட்டீவ் என முடிவு வருவதற்கு பெரும் அளவில் வாய்ப்புகள் இருக்கிறதா என்பது சந்தேகமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா