கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கலைவாணர் அரங்கில் 06 ஜூலை 2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
தடுப்பூசி சிறப்பு முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர்.ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், செய்தித்துறை கூடுதல் இயக்குநர் தி.அம்பலவாணன் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இம்முகாமில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்று பயனடைந்தனர்.
கருத்துகள்