இந்தியாவின் தலைமையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக விஷயங்களுக்கான பிரிக்ஸ் குழுவின் கூட்டம்

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்பொருளாதாரம் மற்றும் வர்த்தக விஷயங்களுக்கான பிரிக்ஸ் குழுவின் கூட்டம்: இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது

இந்தியாவின் தலைமையில் 2021-ஆம் ஆண்டின், பொருளாதாரம் மற்றும் வர்த்தக விஷயங்களுக்கான பிரிக்ஸ் குழுவின் கூட்டம் ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற்றது. பிரிக்ஸ் அமைப்பின் பல்வேறு குழுக்களில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த விஷயங்களுக்கு இந்தக் குழு பொறுப்பு வகிக்கிறது. வர்த்தகத் துறை, பொருளாதாரம் மற்றும் வர்த்தக விஷயங்களுக்கான பிரிக்ஸ் குழுவின்  தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறது.

மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தின்போது, பிரிக்ஸ் அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அதிகரிக்கவும் கீழ்க்காணும் இந்தியாவின் திட்ட முன்மொழிவுகள் பற்றி உறுப்பினர்கள் விவாதித்தனர்.

பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையில் பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பு.

மின்னணு வர்த்தகத்தில் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பிரிக்ஸ் அமைப்பின் திட்டம்.

வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவர ஆரோக்கிய நடவடிக்கைகளுக்கு வரியில்லா தீர்வு முறைகள்.

சுகாதாரம் மற்றும் தாவர ஆரோக்கிய பணிக்குழு நடைமுறை.

மரபணு வளங்கள், பாரம்பரிய அறிவுசார் மற்றும் பாரம்பரிய கலாச்சார வெளிப்பாடுகளின் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்புத் திட்டம்.

தொழில்சார் சேவைகளில் ஒத்துழைப்பு பற்றிய பிரிக்ஸ் அமைப்பின் திட்டம்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ள பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்பாக இந்தியாவின் திட்ட முன்மொழிவுகளை இறுதி செய்ய இந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டனர்.

வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்தியா முன்வைத்த கீழ்க்காணும் நிகழ்வுகளுக்கும் உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்:

 வர்த்தகத் துறையின் சார்பாக பொருட்களை விற்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையேயான காணொலிக் கூட்டத்தை வரும் ஆகஸ்ட் 16-18 ஆம் தேதி வரை பிரிக்ஸ் வர்த்தகத் திருவிழாவில்  நடத்துவது.

  பிரிக்ஸ் அமைப்பின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம் வட்ட மேஜை மாநாடு ஒன்றை ஜூலை 22 ஆம் தேதி நடத்துவது.

  இந்திய ரிசர்வ் வங்கி சார்பாக ஜூலை 16 மற்றும் ஆகஸ்ட் 13ம் தேதிகளில் சேவைகள் வர்த்தக புள்ளி விவரங்கள் பற்றி இரண்டு பயிலரங்குகளை நடத்துவது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்