தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் மகளிரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பராமரிப்பை மேம்படுத்தி - தடங்களை மறு ஆய்வு செய்து பொது மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகளின் சேவையை மேம்படுத்த வேண்டுமென போக்கு வரத்துத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  தலைமைச் செயலகத்தில், போக்கு வரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், இனிவரும் பத்தாண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற  ஆய்வுக் கூட்டத்தில், போக்கு வரத்துத் துறையின் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் சேவைகள் குறித்தும், போக்குவரத்துத்துறை அலகுகளின் செயல்பாடுகள், குறிப்பாக 8 தமிழ்நாடு அரசுப் போக்குவாத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்த முதலமைச்சர் 

அரசுப் பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், தடங்களை மறு ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்துகள் சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பொதுப் பேருந்து போக்குவரத்து அமைப்பு, பேருந்து சேவைகள், போக்கு வரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்வது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை செயல்பாட்டுத் திறன், நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் இணையதள சேவைகளின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், சாலைப் போக்குவரத்து       நிறுவனம், அதன் ஓட்டுநர் பயிற்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள், பல்லவன் போக்கு வரத்து அறிவுரைப் பணிக்குழு, தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மாற்று எரிபொருள் மூலம்பேருந்து இயக்கம்

இரயில்வே திட்டங்கள் மற்றும் விமானநிலையத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்தும், சுற்றுச் சூழல் மாசினைக் குறைத்திடும் வகையில், டீசலுக்குப் பதிலாக மாற்று எரிசக்தி மூலம் அதாவது மின்கலன், இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்குதல் குறித்தும், எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை மையங்கள் அமைப்பது குறித்தும், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்தும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன். போக்கு வரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா. போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலாளர் எஸ். நடராஜன், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.    மேலும்                      தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் மகளிரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு அறிவிப்பு.             தமிழ் நாடு அரசு நகர் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் மகளிர் பயணிகளிடம் அன்பான உப சரிப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தி.மு.க. அளித்த தேர்தல் அறிக்கை           வாக்குறுதிப் படி, ஜூலை மாதம் 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற் கொள்கின்றனர். அரசுப் பேருந்துகளில்                பயணிக்கும் பெண்களுக்குக் கட்டணம் வசூலிக்காமல் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது,மாநகர்ப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓட்டுநர் பேருந்தை குறித்த இடத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்ததிற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.

நடத்துனர்கள் வேண்டு மென்றே பேருந்தில் இடமில்லை என்று கூறி பெண் பயணிகளை இறக்கி விடக்கூடாது.

வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக இறக்கிவிட வேண்டும்"

இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  மேலும் இது காலத்தின் கட்டாயம் பழி வாங்கும் நடவடிக்கையல்ல.. போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்

கடந்தாட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கையல்ல என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்வதே தமிழக முதல்வர் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களின் வேலையாக உள்ளது என்றும் கூறினார்.


முதுகுளத்தூர் செல்லும் வழியில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட கொள்முதல் முறைகேடு குறித்த கேள்வி எழுப்பினர்

தப்பு செய்தால் தண்டனை.

உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை கொள்வான். கடந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. திமுக ஆட்சியில் பெண்கள் விரும்பி பயணிக்கிறார்கள் அதனால் பெண்கள் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக எதிர்பார்க்கப்பட்டது தற்போது 60 சதவீதமாக உள்ளது. பழிவாங்கும் உணர்வு என்பது இதில் கிடையாது.

அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்வதே தமிழ்நாடு முதல்வர் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களின் வேலையாக உள்ளது. இட ஒதுக்கீடு பெண்களுக்கான பிரச்சனை மற்றும் ஒன்றிய அரசோடு இருக்கக்கூடிய நடவடிக்கைகள் என அனைத்திலும் நிதானமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார். எனவே இந்த ஆட்சியில் நீதி நியாயத்தை எதிர்பார்க்கலாம்.

புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிதாக 2200 பேருந்துகள் வாங்குவதற்காக ஜெர்மனியிலிருந்து கடனுதவி வர உள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் டீசல் பேருந்துகள் உட்பட 500 பேருந்துகள் வரை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்குவதன் மூலம் டீசல் செலவு மிச்ச படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.

அதி சொகுசு பேருந்துகள் (மல்டி ஆக்சில் பஸ்) இயக்குவதற்கு

தமிழக அரசைப் பொறுத்தவரை மாற்றுத் திறனாளிகளுக்கு என வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். எனவே சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த வாகனங்கள் அமைத்து தரப்படும்.

இந்த அரசு தொழிலாளர்களுக்கான அரசு. கொரோனா முடிந்த பிறகு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எனவே தொழிலாளர்கள் பிரச்சினையில் பின்வாங்க மாட்டோம். நியாயமான முறையில் நடந்து கொள்வோம் என்றார் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா