ஜல்சக்தி அமைச்சகம் 100 நாள் 'சுஜலாம்' பிரச்சாரம் ஆரம்பம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக  100 நாள் 'சுஜலாம்' பிரச்சாரத்தை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. கழிவு நீர் மேலாண்மையை கிராம அளவில் மேற்கொண்டு, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களை அதிக அளவில் உருவாக்குவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம், நாடு முழுவதும் குறுகிய காலத்தில் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்கள் உருவாக்கப்படும். 2021 ஆகஸ்ட் 25 அன்று தொடங்கிய இந்த பிரச்சாரம் அடுத்த நூறு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

10 லட்சம் குட்டைகளை அமைப்பது உள்பட,  கிராமங்களில் கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மைக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல் நீர்நிலைகளின் நீடித்த மேலாண்மையையும் இந்த பிரச்சாரம் கருத்தில் கொள்ளும்.  நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது கிராமப் பகுதிகளிலும் கிராமங்களுக்கு வெளியேயும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேம்படுத்தப்பட்டு, நீர்நிலைகள் புத்தாக்கம் பெறும்.

தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக சமுதாய ஆலோசனைகள் மற்றும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிப்பது மற்றும் கழிவுநீர் குட்டைகளை அமைப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதுதொடர்பான 100 நாள் திட்டம்

உருவாக்கப்படும். தேவையான அளவு கழிவுநீர் குட்டைகளும் கழிவறைகளும் கட்டப்பட்டு, கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் கழிவறைகளை பயன்படுத்துவது உறுதிசெய்யப்படும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748899ஜல்சக்தி அமைச்சகம்

100 நாள் 'சுஜலாம்' பிரச்சாரம் ஆரம்பம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக  100 நாள் 'சுஜலாம்' பிரச்சாரத்தை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. கழிவு நீர் மேலாண்மையை கிராம அளவில் மேற்கொண்டு, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களை அதிக அளவில் உருவாக்குவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம், நாடு முழுவதும் குறுகிய காலத்தில் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்கள் உருவாக்கப்படும். 2021 ஆகஸ்ட் 25 அன்று தொடங்கிய இந்த பிரச்சாரம் அடுத்த நூறு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்

10 லட்சம் குட்டைகளை அமைப்பது உள்பட,  கிராமங்களில் கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மைக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல் நீர்நிலைகளின் நீடித்த மேலாண்மையையும் இந்த பிரச்சாரம் கருத்தில் கொள்ளும்.  நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது கிராமப் பகுதிகளிலும் கிராமங்களுக்கு வெளியேயும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேம்படுத்தப்பட்டு, நீர்நிலைகள் புத்தாக்கம் பெறும்.

தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக சமுதாய ஆலோசனைகள் மற்றும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிப்பது மற்றும் கழிவுநீர் குட்டைகளை அமைப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதுதொடர்பான 100 நாள் திட்டம்

உருவாக்கப்படும். தேவையான அளவு கழிவுநீர் குட்டைகளும் கழிவறைகளும் கட்டப்பட்டு, கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் கழிவறைகளை பயன்படுத்துவது உறுதிசெய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்