சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் 10 நிறுவனங்கள் ட்ரோனைப் பயன்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி


உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் 10 நிறுவனங்கள் ட்ரோனைப் பயன்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி

நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் குறிப்பிட்ட 10 நிறுவனங்கள் நிபந்தனையின் அடிப்படையில் ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. ஆளில்லா விமான முறை (யுஏஎஸ்) விதிகள்,2021-இல் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் நிறுவனம், பயிர்களின் வளத்தை மதிப்பிடுவதற்கும், பயிர்களுக்கு நோய் ஏற்படுவதைத் தடுக்கவும் ட்ரோனைப் பயன்படுத்தி திரவங்களைத் தெளிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, கர்நாடக அரசுக்கும், மும்பை, மேற்கு வங்கத்தின் பர்ன்பூர், ஐதராபாத், அகமதாபாத், மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட  நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அல்லது மாற்று ஆணை பிறப்பிக்கப்படும் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்