முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர்களுக்கு 75- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் பெருவிழா இணையவழி கருத்தரங்கம்

காந்தியடிகளின் போராட்டம் உலகம் சார்ந்த அறப்போர்



மத்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர்களுக்கு 75- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் பெருவிழா என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கமும்,  வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பு செய்தது.

செந்தமிழ் இதழ் ஆசிரியர் முனைவர் இரா.சதாசிவம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியது; மகாத்மா காந்தியடிகள் நாட்டின் விடுதலைக்காக உள்ளத்தாலும் உடலாலும் பாடுபட்டவர்.  அவரது அறப்போர் வீச்சானது உலகம் முழுதும் உள்ள செய்தித்தாள்களில் இடம்பெற்றிருந்தது. மக்களின் உழைப்பு, கல்வி, அறிவு இவற்றை சர்வோதயம் என்று குறிப்பிட்டார். நெசவுத் தொழிலாளர்களும் விவசாயிகளும் நாட்டின் முதுகெலும்பு, அவர்கள் நைந்துவிடாமல் காக்க வேண்டும். மாணவர்கள் அறிவாலும் சிந்தனையாளும் காந்தியடிகள் பயணித்தப் பாதையில் சென்று உலகத்தை விடுவிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக காந்திய நிர்மாணத்திட்ட அருங்காட்சியக இயக்குனர், முனைவர் த.ரவிச்சந்திரன் பேசியது; இந்திய விடுதலைப் போராட்டமானது, கத்தியின்றி இரத்தமின்றி காந்தியடிகள் தலைமையில் அஹிம்சை முறையில் நடைபெற்றது.  பல சத்தியாகிரகிகள் துன்பப்பட்டு, சிறைவாசம் சென்று உயிர் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம். வன்முறையில், ரத்தம் சிந்தி பெற்ற பிரெஞ்சுப்புரட்சி , ரஷ்யப்புரட்சிகளில் இருந்து முற்றிலும் இது வேறுபட்டது.  காந்தியடிகள் தமிழகத்திற்கு தன் வாழ்நாளில் 21 முறை வந்துள்ளார். மதுரை மாநகருக்கு ஐந்து முறை வந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மதுரை மாநகரில் தான் அரைமுழ ஆடைக்கு மாறினார். வருங்காலம் மாணவர்கள் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் நன்கு படித்து பொறுப்புணர்ந்து இந்திய நாட்டின் நிலையை உயர்த்த வேண்டும்.  இதை அவர்கள் இன்றைய தினம் சூளுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் புலத்தலைவர் முனைவர் பா.ஆனந்தகுமார் தமிழ் இலக்கியங்களில் இந்திய விடுதலைப்போர் என்ற தலைப்பில் பேசியதாவது; இலக்கியங்கள் சமூக ஆவணமாகத் திகழ்வதோடு சமூக மாற்றத்திற்கான காரணியாகவும் விளங்குகின்றன. இந்திய விடுதலைப் போர் தமிழ் இலக்கியத்தில் விரிவான பதிவைப் பெற்றுள்ளது. பாரதியாரின் படைப்புகள் இதன் மையமாகத் திகழ்கின்றன. பாரதியார் காசி, கொல்கத்தா, சூரத் ஆகிய இடங்களில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். இந்திய விடுதலையை களத்தில் நின்று பாடியவர். திலகரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு அவரது பால பாரத சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். அவரது ஒவ்வொரு தேசிய பாடலுக்கும் வரலாற்றுக் குறிப்பு உண்டு. விவேகானந்தரின் சகோதரர் யுகாந்தர் பத்திரிகை ஆசிரியர் பூபேந்திர நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது பூபேந்திர விஜயம் பாடலைப் பாடினார். வ.உ.சி.‌ சிறையில் அடைக்கப்பட்ட போது சுதந்திர தாகம் பாடலைப் பாடினார். சென்னையில் 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதேசிய  ஊர்வலத்தின் இறுதியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தான் தாயின் மணிக்கொடி பாடலைப் பாடினார். பாரதி காட்டும் தேசியக் கொடியில் ஒருபுறம் இந்திரனின் வச்சிராயுதமும் மற்றொரு புறம் இஸ்லாமியரின் இளம் பிறையும் நடுவில் வந்தேமாதரம் எனும் மந்திரச் சொல்லும் இடம் பெற்றுள்ளது. பாரதியைப் போல பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம், கவிமணி தேசிக விநாயகம் ஆகிய கவிஞர்களும் இந்திய விடுதலையை வரவேற்றுப் பாடியுள்ளனர். நாடகத்தின் மூலம் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், மதுரகவி பாஸ்கர தாஸ், விசுவநாத தாஸ் ஆகியோர் விடுதலைப் போராட்ட உணர்வைப் பொது மக்களிடம் கொண்டு சென்றனர்.

மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக விளம்பர உதவி அலுவலர் திரு ப.வேல்முருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை ஆற்றினார். மதுரை செந்தமிழ் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியரும் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் பூ.பூங்கோதை நன்றி தெரிவித்தார். முனைவர் பா.நேருஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இக்கருத்தரங்கை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இளம் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ்.வி.மருது பகவதி  முதலிடத்தையும், முதுகலை  இரண்டாம் ஆண்டு மாணவி  ரம்யா இரண்டாம் இடத்தையும் மற்றும் இளம் இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவர் சமயக்கனி மூன்றாம் இடத்தையும் பிடித்து பரிசுகளைப்பெற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...