தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நியூஸ் ஆன் ஏர் செயலியின் தரவரிசைப் பட்டியல்: விவித் பாரதி நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு
நியூஸ் ஆன் ஏர் செயலியின் நிகழ்ச்சிகளை தரவரிசைப்படுத்துவதில் விவித் பாரதியில் பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளும் புதிதாக இடம்பெற்றுள்ளன. பூலே பிஸ்கே கீத், குச் பாதேன் குச் கீத் மற்றும் விவித் பாரதி கி ரங்கோலி ஆகியவை இந்த அலைவரிசையில் மிகவும் பிரபலமான வானொலி நிகழ்ச்சிகள் ஆகும்.
நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நேரலை ஒலிபரப்புகள் பிரபலமாக உள்ள இந்திய நகரங்களுக்கான தரவரிசையின் முதல் 10 இடங்களில் பாட்னாவை பின்னுக்குத் தள்ளி, முதல்முறையாக லக்னோ இடம்பெற்றுள்ளது. சென்னை தொடர்ந்து 4-ஆம் இடம் வகிக்கிறது.
தரவரிசையில் மிகப்பெரும் மாற்றமாக தில்லி கோல்ட் பண்பலை வரிசை, 9-ஆம் இடத்திலிருந்து 6-ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ரெயின்போ கன்னடா காமன்பிலு 4-ஆவது இடத்திலிருந்து 7-ஆவது இடத்திற்கும், தில்லி ரெயின்போ பண்பலை வரிசை 7-ஆவது இடத்திலிருந்து 10-ஆவது இடத்திற்கும் பின் தள்ளப்பட்டுள்ளன. கொடைக்கானல் வானொலி 8-ஆவது இடத்தில் உள்ளது.
பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர்-இல் அகில இந்திய வானொலியின் சுமார் 240 சேவைகள் நேரலையாக ஒலிபரப்பப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8000 நகரங்களில் வசிக்கும் மக்கள் இந்த செயலியின் வாயிலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகின்றனர்.
ஜூலை 16 முதல் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை அமைத்துள்ளது.
கருத்துகள்