முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கத் தகுந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்க ஐஐடி உதவுகிறது

ஐஐடி மெட்ராஸ் தமிழகத்தைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களுக்கு, நவீன காலத் தேவையான மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கத் தகுந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்க உதவுகிறது



ஐ ஐ டி மெட்ராஸின் ஊரகத் தொழில்நுட்பச் செயற்குழு(RuTAG), மாறி வரும் நுகர்வோர் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், தமிழகக் குயவர்களுக்கு உதவ, மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தக்கூடிய வகையில் பாண்டங்களைத் தயாரிக்க பொது ஆலையை நிறுவ உதவியுள்ளது. சந்தையில் இந்தப் பொருட்களின் மதிப்பு கூடியிருப்பதால், இது பாரம்பரியக் குயவர்களுக்கு நிலையான வருவாய் ஈட்ட உதவும்.

பல பாரம்பரிய குயவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நிலையில்,  வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றன. கைவினைஞர்களின் வருவாயை அதிகரிக்க, உற்பத்தித் திறனை மட்டுமல்லாமல் கைவினைஞர்களின் ஊதியத்தையும் மேம்படுத்த கூடுதல்திறன் மற்றும் தயாரிப்புப் பயிற்சியுடன் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பெருமுடிவாக்கத்தில் பொது ஆலை ஒன்றைச் செயல்படுத்த  ஐஐடி மெட்ராஸ் உதவுகிறது.


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தென்மண்டல பைப்லைன்ஸ் (ஐஓசிஎல்-எஸ்ஆர்பிஎல்) பிரிவின்  சிஎஸ்ஆர் நிதியுதவியுடன்  நாகர்கோவிலில் உள்ள அரசு சாரா அமைப்பான சமூக மேம்பாட்டு மையத்தைச் செயல்பாட்டுக் கூட்டாளியாகக் கொண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ்,  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்   குயவர்களுக்கு உதவுகிறது

இந்த முன்னெடுப்பில் ஐஐடி மெட்ராஸின் பங்களிப்பு குறித்து வலியுறுத்திப் பேசிய RuTAG-யின் பொறுப்பாளர் பேராசிரியர் அபிஜித் பி தேஷ்பாண்டே, “ஒரு நிறுவனத்தின் உள்ளே உருவாகும் தொழில்நுட்ப மேம்பாடு, பல்துறைகளுடனும் தொடர்பு கொண்ட ஒரு முன்னெடுப்பாக உருவெடுப்பது அவசியம். அந்த வகையில், RuTAG, CGCRI, CSD, IOCL, அரசு அமைப்புகள், உள்ளூர்க் கைவினைஞர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பயன்களைப் பகிர்ந்தளிக்கிறது. இது மேலும் மேம்பட, அந்தக் கைவினைஞர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் சென்று சேர்த்து, அதற்கேற்பத் தொழில்நுட்பத்தில் மேம்பாட்டைக் கொண்டு வரலாம்” என்று கூறினார்.

மேலும், இந்த மையத்தின்  நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேராசிரியர் அபிஜித் பி.தேஷ்பாண்டே, “களிமண் உற்பத்தித்திறனையும், தரத்தையும் அதிகரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. CFC மூலம் ஒரு பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பால், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான  உரிமை அதிகரிக்கிறது. மேலும்,மையத்தின் செயல்பாடுகளைச் சுற்றி வேலை வாய்ப்புகளும் பெருகுகின்றன.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஐஓசிஎல் நிர்வாக இயக்குனர் திரு. எஸ்.எஸ். சாவந்த், RuTAG-IIT மெட்ராஸ் பொறுப்பாளர்,  பேராசிரியர் அபிஜித் தேஷ்பாண்டே, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் திருமதி. பி. மல்லிகா, சமூக மேம்பாட்டு மையத்தின்  இயக்குனர் (கன்னியாகுமரி) டாக்டர் பகவதீஸ்வரன் மற்றும் பெருமுடிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி பாலலட்சுமி வெங்கடேசன்  ஆகியோர் முன்னிலையில் 2021 ஆகஸ்ட் 11 அன்று இந்த மையம் தொடங்கப்பட்டது

இந்த மையத்தின் மூலம் பெறப்படக்கூடிய முக்கிய விளைவுகள்:

குயவர்களின் வருவாய் மூன்றிலிருந்து நான்கு மடங்கு உயரும்.

பாரம்பரிய மண் பாண்டப் பொருட்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் மூலம் நான்கு மடங்கு சந்தை மதிப்பு கூடும்.

பெருமளவு சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதித் தரம்

பயிற்சி பெறுவோர் நேரடிப் பயிற்சி மற்றும் வழிகாட்டல் மூலம் தொழில் முனைவோராகவும் வாய்ப்பு

மாநிலத்திலுள்ள மற்ற மண்பாண்டத் தொழில் மையங்களிலும் இம்முறை தழுவப்படும் வாய்ப்பு

பல்வேறு வகையான களிமண் பொருட்களின் உற்பத்தி தொடர்பான வன் திறன், மென் திறன்களில் இதுவரை மொத்தம் 82 நபர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிர்வாக இயக்குனர்  திரு.எஸ்.எஸ். சாவந்த், ஐஓசிஎல் பல்வேறு கிளஸ்டர்களில் இதுபோன்ற வாழ்வாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

பயிற்றுவிக்கப்பட்ட குயவர்கள் வீட்டு உபகரணங்கள், அதிக சந்தை மதிப்புகள் கொண்ட நுண்ணலை அடுப்பில் பயன்படுத்தக்கூடிய களிமண் பாண்டங்கள்,  கலைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சேமிப்பு கொள்கலன்களை உள்ளடக்கிய பல்வகைப்பட்ட களிமண் பொருட்களைக் காட்சிப்படுத்தினர். ஒருங்கிணைந்த மட்பாண்ட உற்பத்தி அலகு மூலம் மைக்ரோவேவ் மட்பாண்டங்கள் உட்பட களிமண் பொருட்கள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்கள், புதிய பயிற்சி பெற்ற CFC யின் ஆதரவைப் பெற்று பயிற்சி பெறுவோர் தங்கள் சொந்த மட்பாண்ட அலகுகளை அமைக்க ஊக்குவிக்கும் அளவுக்கு முக்கிய கவனத்தைப் பெற்றன.

சமூக மேம்பாட்டு மையம், சி.எஸ்.டி., கன்னியாகுமரியின் இயக்குநர் டாக்டர் பகவதீஸ்வரன், இந்த மையத்தின்  செயல்பாட்டு மாதிரியை விவரித்தார் மற்றும் இந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய குயவர்களுக்கான கையேடு ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட, ஐஓசிஎல் நிர்வாக இயக்குநர் திரு. எஸ்.எஸ்.சாவந்த் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (டிஎன்எஸ்ஆர்எல்எம்) திட்ட அலுவலர் திருமதி பி. மல்லிகா, இந்த மையத்தைத் தொடங்கி வைத்ததுடன், மேலும் புதிய கிளஸ்டர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களிலும் இந்தத்  தொழில்நுட்ப பரவலை மேம்படுத்துவதில் ஆர்வம் வெளியிட்டார்.

இந்தத் தகவல், சென்னை, ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...