முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்கள்

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்கள்



கருத்துக் கோர்வையை மெருகேற்றும் புகைப்படக்கருவி என்ற தலைப்பில் ஒளிப்பதிவாளர் திரு அல்ஃபோன்ஸ் ராய் உரையாற்றுகிறார்

கருத்துக் கோர்வையை மெருகேற்றும் புகைப்படக்கருவி என்ற தலைப்பில் ஒளிப்பதிவாளர் திரு அல்ஃபோன்ஸ் ராய் உரையாற்றும் நிகழ்ச்சியை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் நாளை (ஆகஸ்ட் 25, 2021) காலை 10 மணிக்கு நடத்தவிருக்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பாக நடைபெறும் ஐகானிக் வாரம் 2021 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி, 'படத்தொகுப்பில் தொழில்நுட்பம்- அன்றும், இன்றும்’ என்ற தலைப்பில் திரைப்படத் தொகுப்பாளர் திரு. அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத் கலந்து கொண்ட இணையவழி நிகழ்ச்சியில், முன்பதிவு செய்திருந்த தமிழ்நாட்டில் உள்ள திறன் மேம்பாட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 120 மாணவர்கள் இந்த அமர்வில் பங்கேற்றார்கள். தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, படத்தொகுப்பில் உள்ள நடைமுறைகள் மற்றும் படைப்பம்சங்கள், கதையைத் திறம்பட எடுத்துரைப்பதில் அவற்றின் தாக்கம் குறித்து திரு. ஸ்ரீகர் பிரசாத் உரையாற்றினார். மின்னணு வாயிலாக அவருடன்  கலந்துரையாடிய மாணவர்கள், இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டனர்.

www.cinemasofindia.com என்ற தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளத்தில், ‘திரைப்படத் தயாரிப்பில் நவீன இந்தியா மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்' என்ற கருப்பொருளில் பல்வேறு விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள் ஒரு வார காலத்திற்கு இலவசமாக ஒளிபரப்பப்படும்.

ஐகானிக் வாரம் 2021 கொண்டாட்டங்கள் குறித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படங்கள் பிரிவு இயக்குநரும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநருமான திருமதி. தன்பிரீத் கௌர், “இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடைபெறும் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களின் போது, திரைப்படத் திறன் சார்ந்த நிகழ்ச்சிகளை இணையவழி வாயிலாக நடத்துவதற்கும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளத்தில் திரைப்படங்களை திரையிடுவதற்கும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு சர்வதேச நிலவரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இளைஞர்கள் தங்களது தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”, என்று கூறினார்.

ஆகஸ்ட் 23 முதல் 29 வரை நடைபெறும் ஐகானிக் வாரம் 2021, இந்திய அரசின் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ முன்முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பொதுமேலாளர் திரு. டி. ராமகிருஷ்ணன் பேசுகையில், “திரைப்படத் தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு குறித்த அமர்வுகளில், புகழ்பெற்ற மற்றும் விருதுகள் வென்ற சிறப்பு அழைப்பாளர்களிடமிருந்து   பல்வேறு திறன்களை  மாணவர்கள் பெறுவதற்கு இது ஒரு மிகச்சிறந்த தருணமாக விளங்கும்”, என்று தெரிவித்தார்.

“பல்வேறு திரைப்படத் திருவிழாக்களுக்கு உகந்த தளமாக இது உருவாகி வருகிறது. ஐகானிக் வாரத்தை முன்னிட்டு, இந்தத் தளத்தில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பல்வேறு படைப்புகளை ஒளிபரப்புவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். திரைப்பட அறிவை மேம்படுத்தி புதிய தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இதன் மூலம் ஊக்கமளிக்கப்படும்”, என்று சிண்டிகேஷன் அண்ட் மார்க்கெட்டிங்கின் விநியோகப் பிரிவு தலைவர் திருமிகு தீப்தி சாவ்லா கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் பற்றி:

திரு அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத்-

திரு அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத், இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிப் படங்களில் அதிகமாகப் பணியாற்றி வருகிறார். எட்டு தேசிய திரைப்பட விருதுகளையும், 5 கேரள மாநிலத் திரைப்பட விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும், 2 ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் பல்வேறு மொழிகளில் பங்களித்ததற்காக 2013-ஆம் ஆண்டின் லிம்கா சாதனைப் புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. “அதிக எண்ணிக்கையிலான மொழிகளில் தொகுக்கப்பட்ட திரைப்படங்களுக்கான” சாதனையையும் படைத்து,  லிம்கா சாதனைப் புத்தகத்தில் திரு பிரசாத் இடம்பெற்றுள்ளார். இதுவரை 17 வெவ்வேறு மொழிகளின் படங்களுக்கு அவர் திரைப்படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

திரு அல்ஃபோன்ஸ் ராய்-

திரு அல்ஃபோன்ஸ் ராய், இந்திய ஒளிப்பதிவாளராவார். அடிப்படையில் அவர் ஓர் வன உயிரின ஒளிப்பதிவாளர். டிரெஷர் சீகர்ஸ்: டிபெட்’ஸ் ஹிட்டன் கிங்டம், கிங்டம் ஆஃப் கோப்ரா, டெம்பிள் டவர், எலிபன்ட் மௌண்டைன் மற்றும் டைகர் பை நைட் போன்ற வன உயிரின ஆவணங்களில் தமது பங்களிப்பை இவர் வழங்கியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமான ஆமீர்க்கு அவர் விருது பெற்றார். ரெய்ட், மே கட், ஆமீர், குலாபி கேங், மும்பை கட்டிங் உள்ளிடிட்ட திரைப்படங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.

சினிமாஸ் ஆஃப் இந்தியா:

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளமான www.cinemasofindia.com இல்  ‘திரைப்படத் தயாரிப்பில் நவீன இந்தியா மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்' என்ற கருப்பொருளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். ஐலண்ட் சிட்டி, பயாஸ்கோப், கிராசிங் பிரிட்ஜஸ், பங்கர்வாடி, வீஸ் மஞ்சி வீஸ், மிஸ் பீட்டீ’ஸ் சில்ரன் மற்றும் ஏக் கர் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் பற்றி:

கடந்த 1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், இந்தியாவில் சிறந்த திரைப்பட இயக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் (இந்திய அரசு) உருவாக்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகளின் தனிநபர் திரைப்படங்களுக்கு நிதி, விநியோகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த ஆதரவை அளிப்பதற்கான சூழலை உருவாக்குவதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...