முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.


20 ஆண்டுகளுக்கு முன் 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானபோது வெள்ளை அறிக்கை சட்டசபையில் தாக்கலானது. இப்போது பொதுவெளி பத்திரிக்கையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டது.


தமிழகத்தின் கடன் சுமை எவ்வளவு என்ற தகவலை, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், "வெள்ளை அறிக்கை" தாக்கல் செய்யப்பட்டது





மின் துறையும் போக்குவரத்து துறையும் ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது


தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக வராமலிருக்கிறது


10 ஆண்டுகளில் மாநில வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாகச் சரிவு ஒரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2.63 லட்சம் ரூபாய் கடனுள்ளது உள்ளாட்சித் தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் 2 ஆயிரத்து 577 கோடி அரசுக்கு இழப்பு 27 31 கோடி ரூபாயை வாங்கிய கடனுக்காக தமிழ்நாடரசு, நாள் ஒன்றுக்கு செலுத்தி வருகிறது .


தமிழ்நாடு அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துள்ளது .


மாநிலத்தின் வளர்ச்சி, மற்றும் வேலை வாய்ப்பு ம் குறைவாக இருப்டதை அறிகையில் நிதியமைச்சர்  அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் தற்போதைய மொத்த கடன் சுமை ரூபாய் 5.70 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது


மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களை கூட்டி ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறார் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அவருடைய திறமையான நிர்வாகத்தின் மூலமாக தமிழக அரசு சிறந்த இடத்திற்கு வருமென்ற நம்பிக்கையுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.


சர்வதேச அளவில் பொருளாதார "மந்தம்" ஏற்பட்டால், தற்போதைய சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு சற்று பாதிப்பு அதிகமாகவே இருக்குமென பயத்தையும் நிதியமைச்சர் விளக்கிளார்.


கொரோனா, பணமதிப்பிழப்பு, போன்றவற்றைச் சமாளிக்க கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் வங்கிகள், மருத்துவமனைகள் கட்டமைப்பு,ச் செயல்பாடு சரியானதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சமூகநீதியை,  நீதிக் கட்சி ;தி.மு.க. ;ஆகியவை தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தியதால், பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளி குறைவாக உள்ளது.


தமிழக அரசினுடைய நிதிநிலை அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாக வெள்ளை அறிக்கையின் மூலமாக தமிழக அரசு ஒத்துக் கொண்டிருப்பது கடந்த ஆட்சியில் நடைபெற்ற சீர்கேடுகளாகும்.


75000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாய் அரசுக்கு வராமலேயே இருக்கும் நிலையில், 

தமிழக அரசினுடைய நிதிச்சுமை அதல பாதாளத்திற்கு சென்று விட்ட அதே தருணத்தில் 


வரிச்சுமை இல்லாத அரசு ,

சிறந்த அரசாக இருக்க முடியாது என்றும் , 


வரியில்லாத பட்ஜெட் என்பது கண்துடைப்பு வேலை என்றும்  கூறியிருக்கிறார். இப்படி பல புரட்சிகரமாக கருத்துக்களை வெள்ளை அறிக்கையில் பதிவு செய்த நிதியமைச்சர், தமிழக அரசின் செலவினங்களை குறைப்பதையும், அவர் சுட்டிக் காட்டி இருக்கலாம், 


தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளதென

வெள்ளை அறிக்கை சொல்கிறது.

ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து இந்த அறிக்கையை 

அமைச்சர் வெளியிட்டார்.


இதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டில் அதிமுக வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது.

2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை.

வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை 2,63,976 ரூபாயாக உள்ளது. நன்று

2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17 கோடி; 2016 -21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி.

அந்தத் தருணத்தில் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் 50 சதவீதம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கச் செலவிடப்பட்டது.

அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.

தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது.

தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் , வட்டி அதிகரித்து விட்டது

கடன் சுமை அதிகரித்து வந்த பாதை

1999-2000 - 18,989 கோடி

2000-2001 - 28,685 கோடி

2001-2002 - 34,540 கோடி

2005-2006 - 50,625 கோடி

2011-2012 - 1,03,999 கோடி

2015-2016 - 2,11,483 கோடி

2017-2018 - 3,14,366 கோடி

2020-2021 - 4,56,660 கோடி

2021 - 4,85,502 கோடிவெள்ளை அறிக்கையில்  சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் உயர்த்தியே ஆகவேண்டுமென்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பது கவலை அளிக்கிறது. 

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு மக்களின் பாதிப்பதாக அமைந்துவிடும்.

அதற்குப்  பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடியை,

அதற்குக் காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்க்கின்றனர் 

அப்படிச் செய்யாமல் வெறுமனே  அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. 

பழைய ஆட்சியில் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. என பல தலைவர்கள்  வேண்டுகோளாகும். 

மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச்  சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...