முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு உள்ளூர் கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்

பிரதமர் அலுவலகம் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு உள்ளூர் கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்


இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துகின்றன: பிரதமர்

இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின்  பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துவதாகக் கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளூர் கைவினைப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துகின்றன. எனது கைத்தறி, எனது பெருமை என்ற உணர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நமது நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் தருணமாக தேசிய கைத்தறி தினம் விளங்குகிறது. உள்ளூர் கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிப்போம்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் சுட்டுரைச் செய்தியை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தி பின்வருமாறு:









“கடந்த சில ஆண்டுகளில் கைத்தறிகள் மீதான ஆர்வம் புத்துயிர் பெற்றுள்ளது. எனது கைத்தறி, எனது பெருமையின் உணர்வுக்கு மீராபாய் சானு ஆதரவளிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் கைத்தறித்துறை தொடர்ந்து பங்களிக்கும் என்பதை நான் நம்புகிறேன்”.

கைத்தறி தின கொண்டாட்டம்- உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான நினைவூட்டல்: நிபுணர்கள்

“உள்ளூர் கலைப்பொருட்களை வளர்க்கவும் அவற்றை பிரபலப்படுத்தவும் ஓர் சிறந்த நினைவூட்டியாக கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு சந்ததியினரிடையே வரவேற்பைப் பெறுவதற்காக தரத்தை மேலும் வலுப்படுத்துவதில் கைத்தறித் துறையும் அது சம்பந்தமான ஊரக கலைப் பொருட்கள் துறையும் கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களுக்கு நுகர்வோர் கூடுதல் ஆர்வம் காட்டுவதால், தர மேம்பாடு, காலத்தின் கட்டாயமாகியுள்ளது.” ‘தேசிய கைத்தறி தினம்’ என்ற தலைப்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த இணையதள கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவு பேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஆர் சீரங்கராஜன் கூறினார்.

நெசவுக்கு முந்தைய செயல்முறைகள் மற்றும் தறி உபகரணங்களின் பராமரிப்பிலும் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார். இந்தத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். உதாரணத்திற்கு உணரி போன்ற தொழில்நுட்பங்களால், ஏதேனும் இடர்பாடுகள் எழும்போது, தானியங்கியாக நெசவாளர்களுக்கு தகவல் அளிக்கப்படுவதன் மூலம் அது போன்ற பிரச்சினைகளை சுலபமாக எதிர்கொள்ளலாம். சாயத்தின் செயல்முறைகளில் நிலையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் மூத்த அதிகாரி திரு விஜய் பிரதாப் கௌதம் பேசுகையில், இதே தினத்தன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுவதாகக் கூறினார். கைத்தறி பொருட்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உள்ளூர் பொருட்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பது தான் சுதேசி இயக்கத்தின் முக்கிய நோக்கம். அடிமட்ட அளவில் கைத்தறி துறையில் சேவைகளை அளிப்பதற்காக கைத்தறி அலுவலகங்களும் அதன் கிளைகளும் சென்னை உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.






நெசவுத் தொழிலில் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட திருவண்ணாமலை தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நெசவாளி திரு பி. தனசேகரன், தமது குடும்பம் மூன்று தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். பெருந்தொற்று காலகட்டத்தில் பிற துறைகளைப் போல நெசவுத் தொழிலிலும் கொவிட் தொற்றின் தாக்கம் பெரிதும் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். மூலப்பொருட்களின் விலை உயர்வு, வேலை இழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை நெசவாளிகள் சந்தித்தனர். ஆரணியில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆரணியில் சுமார் ஒரு லட்சம் நெசவாளிகள் வசிப்பதால் இந்த முன்முயற்சி சந்தை உள்ளிட்ட துறைகளில் பேருதவியாக இருக்கும். கோரா, ஜரி போன்ற பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயமான விலைகளில் நெசவாளர்களுக்கு அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வலைதள கருத்தரங்கில் தலைமை உரை நிகழ்த்திய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திரு ஜே. காமராஜ், மகாத்மா காந்தி, கைத்தறியை ஏழ்மையை ஒழிக்கும் முக்கிய கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், ஆங்கிலேயர்களுக்கு எதிரான மாபெரும் ஆயுதமாகவும் பயன்படுத்தி, அதில் வெற்றியும் கண்டார் என்று தெரிவித்தார். கைத்தறி உள்ளிட்ட உள்ளூர்  கலைப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் கொள்கையின் அடிப்படையில் தற்சார்பு இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நல்வாழ்விற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தேசிய கைத்தறி தினத்தன்று காதி மற்றும் இதர ஊரகத் தொழில்துறைகளின் பொருட்களை வாங்கி இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்போம் என்று அனைவரும் உறுதி ஏற்போம் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, புதுச்சேரி கள மக்கள் தொடர்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் டாக்டர் சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி திருமிகு வித்யா ஏ.ஆர் நன்றி தெரிவித்தார்.

ஏழாவது தேசிய கைத்தறி தினம்

.இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறித்துறை அதிக வேலை வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவில் 23 லட்சம் கைத்தறிகள் இருக்கின்றன. 43 லட்சம் நபர்கள் கைத்தறி வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து 1905 ஆம் ஆண்டில் கல்கத்தா டவுன் ஹாலில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த இயக்கம் உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நெசவாளர் சேவை மையங்களிலும் 7வது தேசிய கைத்தறி நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர் சேவை மையத்திலும் இந்த விழா ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

நெசவாளர்களின் சமூக பொருளாதார நிலை மேம்பட பல விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது

1.    தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின் மூலம் குழுமங்களை ஏற்படுத்துதல் (BLOCK LEVEL CLUSTER)

2.    கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய விருது (NATIONAL AWARD), சந்த் கபீர் விருது (SANT KABIR AWARD)       இந்திய கைத்தறி தரச் சான்று (NATIONAL MERIT CERTIFICATE)

3.    நூல் வழங்குவதற்காக கைச்சாத்து புத்தகம்(YARN PASS BOOK)

4.    நெசவாளர்களுக்கான கல்வி திட்டங்கள் (WEAVERS EDUCATION SCHEME-IGNOU, NIOS)

5.    பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் (PRADAN MANDRI JEEVAN JYOTHI BHEEMA YOJANA)

6.    பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம் (PRADHAN MANDRI SURAKSHA BHEEMA YOJANA)

7.    இ - தாகா செயலி(E-DHAAGA)

8.    நெசவாளர்களின் நண்பன் (புண்கா் மித்ரா)(BUNKAR MITRA)

9.    புவிசார் குறியீடு (GI- GEOGRAPHICAL INDICATION ACT).

10.   முத்ரா திட்டம்

11.   இந்திய கைத்தறி பிராண்ட்

இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு                                         சி. வி.எம்.பி. எழிலரசன். முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

திரு மகாலிங்கம், இணை இயக்குநர், / கைத்தறி மற்றும் ஜவுளி துறை,/ நிர்வாக இயக்குநர்  அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், திருமதி தெய்வானை, துணை இயக்குநர் கைத்தறி மற்றும் ஜவுளி துறை, திரு. சுப்பிரமணி, தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகள், மற்றும் நிர்வாக இயக்குநர்கள்,  முருகன் பட்டு கூட்டுறவு சங்கம், திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்கம், கலைஞர் பட்டு கூட்டுறவு சங்கம் , காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்கம் , காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு சங்கம், தேசிய விருது பெற்றவர்கள், திரு ஆர். நாகேஸ்வரன், திரு என். கே. மோகன், தேசிய தகுதி சான்றிதழ் வைத்திருப்பவர் திரு எம்.பி.செல்வகுமார், மற்றும்  இந்த அதிகார வரம்பின் கைத்தறி நெசவாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கைத்தறி துறையில் வடிவமைப்பு சார்ந்த சிறப்பை உருவாக்க  மற்றும் புதிய வடிவமைப்புகளை உருவாக்க நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வசதி செய்ய    வடிவமைப்பு வள மையம் திறக்கப்பட்டது  

இந்த விழா காணொலியில் தேசிய தகவல் மையம் வாயிலாக ஜவுளித்துறை இந்திய அரசு, புதுதில்லியால் ஒளிபரப்பப்பட்டது.   இதில் கைத்தறி குழுமங்களின் நெசவாளர்கள், தேசிய விருது பெற்றவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

சென்னையில் கைத்தறி தினம் 2021 நிகழ்ச்சி

1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களை கவுரவிப்பதையும், கைத்தறி தொழிலுக்கு ஊக்கமளிப்பதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஏழாவது தேசிய கைத்தறி தினத்தின் முக்கிய நிகழ்ச்சி காணொலி மூலம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. 28 நெசவாளர் சேவை மையங்கள், 6 இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்கள், நாடு முழுவதுமுள்ள தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகம் மற்றும் நிஃப்ட் வளாகங்கள், மொகாபத்ரா, கனிஹாமாவில் உள்ள கைவினை கைத்தறி கிராமங்கள், காணொலி  மூலம் நடைப்பெறும் வாங்குவோர் விற்போர் கூட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுமார் 150 கைத்தறி குழுக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன.

சென்னையிலுள்ள நெசவாளர்கள் சேவை மையத்தின் பணியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து கொண்டனர். மேலும், திருவிடைமருதூர்-1, பரமக்குடி-2, அருப்புக்கோட்டை-2, அருப்புக்கோட்டை-5 மற்றும் திண்டுக்கல்-5 ஆகிய கைத்தறி குழுக்களை சேர்ந்த நெசவாளர்களும் இதில் பங்கேற்றனர்.

நெசவாளர்கள் சேவை மையம், சென்னை, இயக்குநர் திரு சி முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.கைத்தறி துறை மூலம் ஊரக வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதை தற்சார்பு இந்தியா திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது

தேசிய கைத்தறி நாள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய கைத்தறி தினமான கடந்த 7ம் தேதி மாலை, இணைய கருத்தரங்கு ஒன்றை கோயம்புத்தூர் களவிளம்பரத்துறை அலுவலகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து நடத்தியது.

இதில் பங்கேற்ற பிரமுகர்களை சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குனர் திரு டி. நதீம் துஃபாயில் வரவேற்றார். அவர் பேசுகையில், ‘‘1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதை நினைவுக் கூறும் வகையில்,  உள்நாட்டு தொழில்களையும், குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. முதல் கைத்தறி தேசிய தினம், பிரதமர் திரு நரேந்திர மோடியால், சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது’’ என்றார்.

தலைமை உரையற்றிய சென்னை மண்டல மக்கள் தொடர்புத்துறை அலுவலக இயக்குனர் திரு ஜே.காமராஜ் பேசுகையில், ‘‘ராட்டையில் நூல் நூற்பது  சுதந்திரத்தின் அடையாளமாகவும், ஏழ்மையை ஒழிக்கும் உபகரணமாகவும் மகாத்மா காந்தியால் பார்க்கப்பட்டது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கைத்தறி துறை மிகப் பெரிய பொருளாதார நடவடிக்கை என்றும், 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேவைாய்ப்பை இது அளிக்கிறது’’ என்றும் கூறினார். 

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் டாக்டர் சி.பிரகாஷ் பேசுகையில், ‘‘ இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த நெசவாளர்களிடமும், பல்வேறு விதமான திறமைகள் உள்ளது என்றும், அவர்களின் தயாரிப்புகள் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன’’ என்றார்.

தேசிய கைத்தறி வளர்ச்சி நிறுவனத்தின் கரூர் கிளை மூத்த அதிகாரி திரு பசவராஜ் பேசுகையில், ‘‘ கைத்தறி துறையின் விரைவான வளர்ச்சிக்காக, தேசிய கைத்தறி வளர்ச்சி நிறுவனத்தை மத்திய அரசு கடந்த 1983ம் ஆண்டு ஏற்படுத்தியது’’ என்றார்.

திருப்பூர், வெள்ளக்கோயில் மகிளம் பொது நல அறக்கட்டளையின் பொது செயலாளர் திரு கே.ஜி.நட்ராஜ் பேசுகையில், ‘‘ நெசவாளர் அட்டைகள், நெசவாளர்களுக்கான முத்ரா திட்டம் மற்றும் இதர நிதியுதவி திட்டங்கள் நெசவாளர்கள் இடையே மிகவும் பிரபலம் அடைந்தன’’ என்றார்.

கோயம்புத்தூர் களவிளம்பரத்துறை அலுவலகத்தின் துணை இயக்குனர் திருமதி கரீனா பி தெங்கமம், இணைய கருத்தரங்கை நிறைவு செய்து பங்கேற்ற விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

என்எஸ்எஸ் அதிகாரி டாக்டர் ஆர். சுனிதா பேசுகையில், ‘‘பல்கலைக்கழக பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கைத்தறி சேலையை மட்டுமே அணிகின்றனர்’’ என்றார். அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் மற்றும் உயர் கல்வி மையத்தின் ஜவளித்துறை மாணவர்கள் மற்றும் என்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த இணைய கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர் களவிளம்பரத்துறை அலுவலகத்தின், களவிளம்பரத்துறை உதவியாளர் திரு.எஸ்.ஆர்.சந்திர சேகரனின் நன்றியுரையுடன் இணைய கருத்தரங்கு நிறைவடைந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...