முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வெற்றியின் பின்னணி வரலாற்றுப் பார்வை

மகாபாரத இதிகாச காலத்தில் கௌரவரகளுக்கு மாற்றாக பாண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் தற்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டும் ஒன்று. வரலாற்றுப் பெயர் பாண்டுப்பிரஸ்தம்.



இடைக்காலத்தில் மொகலாய படையெடுப்பு

முதலாம் பானிபட் யுத்தம் 1526 ஆம் ஆண்டு பாபர் படைக்கும், டில்லியை ஆண்ட இப்ராகிம் லோடி படைக்கும் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற.  பாபர் வென்று டில்லியில் முகலாயப் பேரரசை நிறுவினார்.


இரண்டாவதாக 1556 ஆம் ஆண்டு- வட இந்தியப் பகுதியில் ஆட்சி செய்த டில்லி பேரரசின் சுல்தான் ஹெமுவின் படைக்கும், அக்பரின் படைக்கிடையே 5 நவம்பர் 1556 ஆம் ஆண்டில் பானிபட்டில் நடந்த யுத்தம் அக்பர் வென்று டில்லி முகலாயப் பேரரசர் ஆனார்.


மூன்றாம் பானிபட் போர் 1761 ஆம் ஆண்டு மராட்டியப் பேரரசின் படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது ஷா அப்தாலிக்குமிடையே 14 ஜனவரி 1761 ஆம் ஆண்டில் நடந்த யுத்தத்தில் அகமது ஷா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாப் சுஜா-உத்-தௌ ஆதரித்தில் இரஜபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வராததால். 


மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. தற்போதய பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், டில்லிப் பகுதிகள் ஆப்கானியர்களுக்கு விட்டுத்தரப்பட்டதால் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில்  திருப்புமுனையானது.. இந்தியாவில் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வளர்ச்சிக்குக் காரணமாகும்.இப்போது சுதந்திரம் பெற்று இந்தியாவில் 75 ஆம் ஆண்டு கொண்டாட உள்ள நிலையில் பானிபட்டில் பிறந்த இரஜபுத் படைப்பிரிவின் சுபேதார் நீரஜ் சோப்ரா

டோக்கியோ  ஒலிம்பிக் போட்டிகளில் India’s 🇮🇳 Olympics Medals 

1896🥈🥈

1928🥇

1932🥇

1936🥇

1948🥇

1952🥇🥉

1956🥇

1960🥈

1964🥇

1968🥉

1972🥉

1980🥇

1996🥉

2000🥉

2004🥈

2008🥇🥉🥉

2012🥈🥈🥉🥉🥉🥉

2016🥈🥉

2021🥇🥈🥈🥉🥉🥉🥉

This is highest Olympics tally we ever got in any single edition 




                              முற்காலப் போர் கருவிகளில் ஒன்றான ஈட்டி எறிதலில் வெற்றி கண்டதும் தங்கப்பதக்கம் பெற்றதும் புதிய வரலாற்று நிகழ்வுகளாகும்.       


   

 தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளரான ஜெர்மனியைச் சேர்ந்த ஹோஹன்  இந்தியாவின் Sports Development Authority யும், தடகள சம்மேளனமும் தங்களுக்கு சரியான உதவியும் செய்யவில்லை எனக் குறை கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க முறையான திட்டமிடல்கள் எதுமில்லை எனவும்..


விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவுகளையும் அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லையெனவும்.

தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு  அதிகாரிகளால் தாம் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்..

மேலும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை JSW நிறுவனமே நீரஜ் சோப்ராவிற்கு ஸ்பான்சர்ஷிப் அளித்து உதவியது என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.                               இராணுவ வீரரான நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் நாயக் சுபேதார் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்த அமைப்பின் தலைமைதான் 4 ராஜ்புத்னா ரைஃபிள் பிரிவாகும்.

ராணுவத்திலிருந்து ஒலிம்பிக்கிற்கு வீரர்களைத் தயார் செய்யும் மிஷன் ஒலிம்பிக் விங்கிற்கு சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ராணுவம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது

2010-ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்ற ராணுவ வீரர் சுபேதார் காசிநாத் நாயக்தான் ராணுவத்தில் நீரஜ் சோப்ராவுக்குப் பயிற்சியாளராக இருந்தார்.

அதன்பின் ஜெர்மன் பயிற்சியாளர் வி ஹார்ன் பயிற்சிக்கு நீரஜ் சோப்ரா மாற்றப்பட்டு, 2018 ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்.

இதைத் தொடர்ந்து நாயக் சுபேதார் பதவியிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சுபேதாராக சோப்ரா உயர்ந்தார். 2018 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், ராணுவம் சார்பில் விஷிசித் சேவா விருதும் சோப்ராவுக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...