தடகள போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீன் பங்கேற்க அழைத்துச் செல்ல உத்தரவிட்டு நீதிமன்றம் உத்தரவு


தேசிய செவித்திறன் குறைந்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்றுள்ள சமீஹாவிற்கு  அனுமதி மறுக்கபட்டுள்ளது ஏனெனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற  சமீஹா பர்வீன் போன்ற விளையாட்டு வீராங்கனைகளைப் புறக்கணிப்பதெல்லாம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்கிறதென வேதனை தெரிவித்தார். செவித்திறன் குறைப்பாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டதில் இந்திய அளவில் கலந்து கொண்ட 12 நபரில், தகுதிச் சுற்றில் தகுதி பெற்ற பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்ட நிலையில் செவித்திறன் குறைபாடு உடையோருக்கு நடக்கவிருக்கும் சர்வதேச தடகள போட்டிகளில் சமீஹா பர்வீனை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீஹா பர்வின் உறவினர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது அவசர வழக்காக எடுக்கப்பட்ட நிலையில் போலந்து நாட்டில் நடக்கவிருக்கும் 4 வது சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி இருந்தும், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்பதால், விளையாட்டு மேப்பாடு ஆணையத்தால் புறக்கணிக்கப்பட்டார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் இல்லை. சமீஹா இந்த ஆண்டு கண்டிப்பாக கலந்து கொள்ள முடியாது என்கிற நிலை ஏற்பட்டது.பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி, போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான சர்வதேச அளவிலான தடகள போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீன் பங்கேற்க அழைத்துச் செல்ல உத்தரவிட்டு, நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பான நகலை சமீஹா பர்வீன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வரும் 16 ஆம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்