இந்தியா கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 250-வது நாள்: 83 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இது வரை செலுத்தப்பட்டது

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்  கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 250-வது நாள்: 83 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இது வரை செலுத்தப்பட்டு, முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 83 கோடிக்கும் அதிகமானோருக்கு (83,33,46,676) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 64 லட்சத்திற்கும் அதிகமான (64,98,274) தடூப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்கான இறுதி அறிக்கைகள் இன்று பின்னி
ரவில் நிறைவு செய்யப்படும்.

இதுவரை ஒட்டுமொத்தமாக சுகாதார பணியாளர்களில் 1,03,70,167 பேருக்கு முதல் டோசும், 87,83,665 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 1,83,47,221 பேருக்கு முதல் டோசும், 1,46,66,596 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 33,74,76,070 பேருக்கு முதல் டோசும், 6,67,81,067 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் பேருக்கு 15,36,39,648 முதல் டோசும், 7,14,56,603 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 9,82,67,915 பேருக்கு முதல் டோசும், 5,35,57,724 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 61,81,01,021 முதல் டோசுகளும் 21,52,45,655 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.இன்று மட்டும் (2021 செப்டம்பர் 22), சுகாதார பணியாளர்களில் 329 பேருக்கு முதல் டோசும், 15,310 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 518 பேருக்கு முதல் டோசும், 46,969 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 25,64,082 பேருக்கு முதல் டோசும், 19,93,893 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் பேருக்கு 6,21,778 முதல் டோசும், 6,42,742 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3,08,421 பேருக்கு முதல் டோசும், 3,04,232 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 34,95,128 முதல் டோசுகளும் 30,03,146 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன. கொவிட்-19 இடமிருந்து மக்களை காப்பாற்றக்கூடிய கருவியாக தடுப்புமருந்து வழங்கல் இருப்பதால், உயர்மட்ட அளவில் அது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை: 83 கோடியைத் கடந்து குறிப்பிடத்தக்க சாதனை

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 83 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71,38,205 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 81,69,260 முகாம்களில் 83,39,90,049  தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் 31,990 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.77 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து 88 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  3,01,640 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.90 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 15,27,443 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 55,83,67,013 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து 90 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.11 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.09 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 24 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 107 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விரைவில் 80.67 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 22-ஆம் தேதி வரை 80.67 கோடிக்கும் அதிகமான  (80,67,26,335) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 64 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை (64,00,000) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 4.52 கோடி (4,29,03,090) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா