இந்தியா & ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ‘2+2’ அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை
பாதுகாப்பு அமைச்சகம் இந்தியா & ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ‘2+2’ அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் அறிக்கை
இந்தியா & ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ‘2+2’ அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
“மேன்மைமிகு திருமிகு மாரிஸ் பாய்ன் மற்றும் மேன்மைமிகு திரு பீட்டர் டுட்டன், டாக்டர் ஜெய்சங்கர், தாய்மார்களே, பெரியோர்களே, இந்தியா & ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ‘2+2’ அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கும் இரு அமைச்சர்களை வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய-ஆஸ்திரேலிய விரிவான மூலோபாய கூட்டின் முக்கியத்துவத்தை இந்த பேச்சுவார்த்தை குறிக்கிறது. வெளிப்படையான, சுதந்திரமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் வளமிகுந்த இந்தோ-பசிபிக்கிற்காக பகிர்ந்து கொண்டுள்ள லட்சியத்தின் அடிப்படையில் முக்கியமான கூட்டை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பகிர்ந்து கொண்டுள்ளன. ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்தில் இரு ஜனநாயகங்களுக்கும் பொதுவான அக்கறை உண்டு.
இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து அமைச்சர் பாய்ன் மற்றும் அமைச்சர் டுட்டனுடன் இன்றைக்கு விரிவான மற்றும் ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ராணுவ ஒத்துழைப்பு, சர்வதேச பெருந்தொற்றுக்கு எதிரான போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பலதரப்பட்ட அமைப்பு சார்ந்த கட்டமைப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். ஆப்கானிஸ்தான், கடல்சார் பாதுகாப்பு, பல விதங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம்.
சுதந்திரமான வர்த்தகத்தை உறுதி செய்வதற்கான தேவை, சர்வதேச விதிகளை பின்பற்றி நடப்பது, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்து இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை பொருத்தவரையில், பல்வேறு சேவைகளில் ராணுவ செயல்பாடுகளை நீட்டிப்பது என்றும், ராணுவ தகவல்களை அதிகளவில் பகிர்ந்து கொள்வது என்றும், பரஸ்பர ஆதரவுக்காக நெருங்கி பணியாற்றுவதென்றும் நாங்கள் முடிவெடுத்தோம்.பாதுகாப்பு அமைச்சகம்
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் திரு பீட்டர் டுட்டனுடனான இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் அறிக்கை புதுதில்லி, செப்டம்பர்
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் மேன்மைமிகு திரு பீட்டர் டுட்டன் மற்றும் அவர் தலைமையிலான உயர்மட்ட குழுவை அவரது முதல் அதிகாரப்பூர்வ இந்திய பயணத்தின் போது வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் திருமிகு மாரிஸ் பாய்னுடன் கொவிட்-19 சரவதேச பெருந்தொற்றுக்கு இடையிலும் இந்தியாவுக்கு அவர் வந்திருப்பது நமது இருதரப்பு உறவுக்கு ஆஸ்திரேலியா அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அமைச்சர் திரு டுட்டனுடன் நமது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து பலனளிக்கும் விரிவான ஆலோசனையை நான் நடத்தினேன். இந்திய-ஆஸ்திரேலிய விரிவான கூட்டின் முழு திறனையும் அடைய பணிபுரிவதற்கு நாங்களிருவரும் ஆர்வமாக உள்ளோம்.
கருத்துகள்