தலைவிக்கு வந்த சோதனை.ரிலீஸான 24 மணிநேரத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலை

தலைவிக்கு வந்த சோதனை.ரிலீஸான 24 மணிநேரத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலை

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று, உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 'தலைவி' இப்படம் வெளியான 24 மணி நேரத்தில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது படக்குழுவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ‌.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக்க போட்டி போட்ட நிலையில், முதலில் படத்தை இயக்கி ரிலீஸ் செய்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். ஒரு தற்கால வரலாற்றுக் காவியமாக மனதில் நின்று நிலைக்க வேண்டிய இந்தப் படம், இயக்குனரின் சில தவறுகளால் ஒரு திரைப்படமாகவே பார்க்கப்படுவதாக கருத்துக்கள் வெளியாகிறது.செல்வி ஜெ.ஜெயலலிதா நடிக்கத் துவங்கியது முதல், அவர் 1991 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்து முதலமைச்சரானது வரையிலான இடைப்பட்ட சில சம்பவங்களில் வரலாறு திரிக்கப்பட்டிருப்பதாகவும், சில அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

அதே போல் இது ஒரு வரலாற்று கதை கொண்ட படம் என்றால் கூட, ஜெயலலிதா பெயரை ஜெயா, என்றும் சிலரது பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது, கட்சியின் பெயர்கள் மாற்றத்தால் மனதில் நிற்கும்படியாக இல்லை. முக்கியமாக நடிகை கங்கனா செவ்வி.ஜெ. ஜெயலலிதா போல மாறி நடிக்க முயற்சித்திருப்பது அப்பட்டமாக தெரிவதால் இவரது நடிப்பு எடுபடவில்லை என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், வெளியான 24 மணிநேரத்தில். தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைவி பட முதல் நாள் வசூல் குறைவு அதற்கு காரணம் பல  அரசியலில் ஜெ.ஜெயலலிதா மீதிருந்த ஈர்ப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் பழனிச்சாமி முதல்வராக இருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சியை மக்கள் விரும்பாத நிலையில் அவர்கள் நடத்திய ஊழல் நடவடிக்கை  அவர்கள் தலைவியான ஜெ.ஜெயலலிதாவை மறக்கச் செய்த நடவடிக்கைகளாகத் தான் அதன் பார்வை  ரசிகர்கள் குறைந்த நிலைக்கும் உண்மைக் காரணம். நடிகை கங்கனா ரனாவத் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் மறுநுழைவு கொடுத்துள்ள படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கதைக்களம் சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் முதலில் மிகவும் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம்  வெளியானது. நாடு முழுவதும்  1500 திரையரங்குகளிலும், அயல் நாடுகளில்  200 திரையரங்குகளிலும்  வெளியான. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்பதாலும், பான் இந்தியா படம் என்பதாலும் தலைவி படம் முதல் நாளே 20 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை வசூலாகுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த அளவிற்கு தலைவி படம் குறைவான வசூல் அதுவும் திரையரங்குகள் வாயிலாக வந்திருப்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு பேரதிர்ச்சியாகும். நாடு முழுவதும் பல கோடிகளை வசூலாக தலைவி படம் வாரி குவிக்கும் என்ற நம்பிக்கையில் தான் தலைவி படத்தை ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்குகளில் வெளியிட்டார்கள்.

இவ்வாறு பல பிரச்சனைகளைக் கடந்து திரையரங்குகளில் வெளியான தலைவி படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 40 முதல் 50 லட்சம் வரை தானாம். குறைந்தது 20 கோடியாவது முதல் நாள் வசூலாகுமென எதிர்பார்க்கப்பட்ட படம் 50 லட்சத்தைக் கூட தாண்டாதது அவர்களின் அதிர்ச்சியாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படத்தின் வசூல் ஒரே அடியாக சரிந்திருப்பது குறித்து ஒரு ரசிகர் கருத்து இது அவர் வளர்த்த கட்சியே சரிந்துள்ளது இதில் வசூல் சரியாமல் உயருமா என்பதே மக்கள் விரும்புவது நல்லாட்சி தான் அது கிடைத்தால் மக்களுக்கு வேறு தேடல் இல்லை என்பதே நிதர்சனம்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடலாம் என நினைத்திருந்த கங்கனா ரனாவத்துக்கு தற்போது பெருத்த ஏமாற்றம் என்று தான் கூறவேண்டும்.

ஆயிரத்தில் ஒருவன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன்  போல


இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு குறைவாக இருப்பது தயாரித்தவர்களுக்கும் வினியோகம் செய்தவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தகவல். இப்படத்திற்காக கங்கனா ரனாவத் தமிழகத்திற்கு வந்து படத்தை பிரமோட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி வேறு செலுத்தினார்.அதோடு முதல் காட்சி பார்த்து முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்துக்கள் பல கூறினார் இருந்தும் அவர் கூறிய கருத்துக்களை அவரது கட்சியின் நபர்கள் கூட ஏற்காத நிலை தான் இருக்கிறது. தலைவி படத்தில் சசிகலா நடராஜன் கதாபாத்திரம் முழுமையாக இல்லாவிட்டாலும் மரியாதையாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா