பிஎஸ்என்எல் ஈக்காட்டுத்தாங்கல் நிலையம் புதிய முகவரிக்கு இடமாற்றம்

பிஎஸ்என்எல் ஈக்காட்டுத்தாங்கல் நிலையம் புதிய முகவரிக்கு இடமாற்றம்  : தொலைப்பேசி சேவை சிறிது நேரம் தடைப்படும்


நிர்வாக காரணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவையின் தரம் உயர்த்தலுக்காக, பிஎஸ்என்எல் ஈக்காட்டுத்தாங்கல் தொலைதூர நிலைய பிரிவு (ஆர்எஸ்யு), 8/40, கலைமகள் நகர் 2-வது பிரதான சாலை, ஈக்காட்டுத்தாங்கல் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூந்தமல்லி சாலை, 100 அடி சாலை, கலைமகள் நகர், ஜோதி நகர், விசாலாட்சி நகர்,225xxxx என்ற எண்களில் தொடங்கும் தொலைப்பேசி எண்கள் உள்ள பகுதிகளில் இணைப்பு மீண்டும் வழங்கப்படும் வரை பிஎஸ்என்எல் வாயிலான தொலைத்தொடர்பு சேவைகள் சிறது நேரம் பாதிக்கப்படும். இந்த பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், வாடிக்கையாளர்கள் 044-22320123, 044-22329000 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த இடையூறுகளுக்கு பிஎஸ்என்எல் வருத்தம் தெரிவிப்பதுடன் இணைப்பு விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளிக்கிறது.

இந்த தகவல் பிஎஸ்என்எல் சென்னை தொலைப்பேசியின் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா