முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆரணி உணவகத்தில் கலப்படப் பிரியாணி விற்பனை சாப்பிட்ட பத்து வயதுச் சிறுமி உயிரிழப்பு மூவர் கவலைக்கிடம்

ஆரணியில் உணவகத்தில் நாய் கறி பிரியாணி விற்பனை சாப்பிட்ட பத்து வயதுச் சிறுமி உயிரிழப்பு  மூவர் கவலைக்கிடம் 

ஆரணியில் ஹோட்டல் உரிமையாளருடன் சமையல் மாஸ்டர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் 7 ஸ்டார் என்ற பெயரில் காதர் பாஷா அவரது மகன் அம்ஜத் பாஷா ஆகியோர் உணவகம் நடத்துகின்றனர்.  கடையில் துந்தரீகம் பட்டு ஆனந்த், அவர் மனைவி பிரியதர்ஷினி, மகள் லோசினி (வயது10), மகன் சரண் (வயது14), ஆகியோர் கடந்த புதன்கிழமை உணவு சாப்பிட்டுள்ளனர்.

பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் உள்ளிட்டவற்றை இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்றனர். அப்போது அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றவர்கள்

தொடர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த், சரண், பிரியதர்ஷினி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 வயதுச் சிறுமி லோசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனடையே, இதே உணவகத்தில் சாப்பிட்ட 40 க்கும் மேற்பட்டவர்களுக்கும் இதே பிரச்னைகள் ஏற்பட்டு பலரும்

ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இச் சம்பவத்தை தொடர்ந்து, உணவகத்துக்கு ஆரணி கோட்டாட்சியர் சீல் வைத்தார்.


தொடர்ந்து, உணவகத்தை நடத்தி வரும் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோரை ஆரணி நகர காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது, உணவில் நச்சுப்பொருள் கலந்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் உணவுக் கலப்படம் தடுப்பு அலுவலர்கள் பல ஹோட்டல்களில் சோதனை நடத்தி நாய் கறிகளை பறிமுதல் செய்தனர்.       இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954 ஆம் ஆண்டு அமலாக்கப்பட்டு. இதன் பிரிவு 12 ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். பிரிவு 20 ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50 ஐ திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூபாய்.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும். இந்திய நாடாளுமன்றத்தில்  விற்க தடை செய்த குளிர்பானங்கள் இந்தியா முழுவதும் விற்கப்படுகின்றன. இதில், உயிரைக் கொல்லும் 40 க்கும் மேற்பட்ட வீரியமுள்ள வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பீட்சா என்ற துரித உணவு, வெளிநாட்டு உணவகங்களின் பெயரில் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. அதில், அதிக சுவை மிகுந்த சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி பல நோய்களுக்கு வழியாக அமைந்துவிடுகிறது.உணவுப் பொருளில் கலப்படம் செய்வது, சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானதென்றால், இலஞ்சம் பெறுவது "தன்னையே விற்பதற்கு' ஒப்பானது என்று அறிய வேண்டும். முறைப்படி நடக்க வேண்டிய சமூகப் பணிகள், இலஞ்ச இலாவண்ய  அரக்கனால் முடக்கப்படும் போது, அது தொடர்ந்து பரவி, தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் லஞ்சத்தை தேசிய அவமானம் எனக் கூறலாம். தனிமனித ஒழுக்கமும், அறநெறி கருத்துக்களும் தற்கால மனிதர்களிடம் குறைந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் இலஞ்சப் பேய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால், வருங்கால சமூகம் இன்னும் வலுவிழந்து, வாழ்விழந்தும் போகும். இன்றைய இளைஞர் கூட்டம், இலஞ்சத்தை அடியோடு வெறுக்கிறது. இலஞ்சம், ஊழலுக்கு எதிராக மக்கள் மனநிலை உருவாகி விட்டது. இருந்தும் மக்கள் எளிதாக நடவடிக்கை எடுக்க வழி இல்லை. தமிழகம் முழுவதும் கலப்படம், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு தொடர்கிறது தொடர்பாக புகார் தெரிவிக்க 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் தொடங்கப்பட்டது. நுகர்வோரும் ஆர்வத்துடன் புகார்களை தெரிவித்தனர். ஆனால் இலஞ்சம் பெறும் சுகாதார அதிகாரிகள் கண்டும் காணாத நிலையில்

, 2017 ஆம் ஆண்டு 1,227 புகார்களும் 2018 ஆம் ஆண்டில் 5,345 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 5,109 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் மொத்தம் 11,681 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் தண்டனை கிடைத்ததா என்பதே நம் வினா ?


சுகாதரமற்ற உணவுகள், கெட்டுப்போன இறைச்சிகள், மீன் விற்பனை, நெய், தேயிலை தூள் உள்ளிட்டவற்றில் கலப்படம், தடை செய்யப்பட்ட குட்கா, பான் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகையான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதகவல் படி: வாட்ஸ் அப் எண்ணில் பெறப்படும் புகார்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலகர்களுக்கு அனுப்பப்படுகிறது


.

அவர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களின் மூலம் கள ஆய்வு செய்கின்றனர். கலப்படம், சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


மாதிரிகளை பரிசோதனை செய்து கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் நோட்டீஸ் அனுப்பி சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். நுகர்வோரும் ஆர்வமுடன் புகார்களை அளித்து வருகின்றனர். 24 மணி நேரத்தில் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறினார். ஆனால் இதில் உண்மை உண்டா என்பது தான் எழு வினா? உயிரிழப்பு நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பலனில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...