சிவகங்கை சபரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழப்பு. உறவினர்கள் முற்றுகை

சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் அருகே சபரி  என்ற தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழப்பு. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.


சிவகங்கை வட்டம் கோமாளிபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வரும் பாரதி  அவரது இரண்டாவது பிரசவத்திற்காக சிவகங்கை நகரில் அரண்மனை தெப்பக்குளம் அருகே இயங்கி வரும் சபரி  எனும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கேயே பிரசவத்திற்கு சேர்த்து குழந்தை பிறந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி  பாரதி உயிரிழந்தார். ஆசிரியை பாரதியின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை செய்த தவறான சிகிச்சை தான் காரணமெனக் கூறி உறவினர்கள், மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு சபரி என்ற தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் இறந்த ஆசிரியை பாரதியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா