மத்தியப்பிரதேசத்தில் ராஜ்ய சபா உறுப்பினராகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்தியப்பிரதேசத்தில்  ராஜ்ய சபா உறுப்பினராகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்‌


தமிழக பா.ஜ.க தலைவராக  இருந்த எல்.முருகன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.

ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறகு தமிழ்நாடு தலைவராக பதவியேற்ற எல்.முருகன், மாநிலத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.


காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, தி.மு.க.வில் இருந்த கு.க.செல்வம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோரை பா.ஜ.க.வில் இணைப்பதில் எல்.முருகனின் பங்கு அதிகம். இது தவிர தமிழகத்தில் பாஜக கால்பதிக்கவே முடியாது என்று கூறப்பட்ட நிலையில் பா.ஜ.க 4 இடங்களில் வெற்றி பெற எல்,முருகன்  முக்கிய காரணமாக இருந்தார். எல்.முருகனின் , உழைப்பை பார்த்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்தது பா.ஜ.க தலைமை.


பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெற்றார் எல்.முருகன். மத்திய மீன்வளத் துறை இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.  பதவியில் தொடர அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற நிலையில். தமிழகத்தில் வாய்ப்பு இல்லாததால் புதுச்சேரியிலிருந்து எல்.முருகனை தேர்வு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன


இதற்காக புதுவை பா.ஜ,க சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ராஜ்ய சபா சீட்டை பாஜகவுக்கு ஒதுக்கும்படி கேட்டனர். ஆனால் அங்கு தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து எல்.முருகன் தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவிப்பு வெளியாகியது. மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில். மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே காங்கிரஸில் திருநாவுக்கரசர், பா.ஜ.கவின் இல.கணேசன் ஆகியோர் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது                            தமிழகத்தில்  மத்திய இணை அமைச்சர் கலந்து கொண்டு தெரிவித்த விபரம்

ஆழ்கடல் மீனவர்களின் நலனுக்காகவே மத்திய மீன்வள சட்டம் கொண்டு வரப்படுகிறது: மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன்

ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் நலனுக்காகவே மத்திய மீன்வள சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு,  மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடையே உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் திரு. எல். முருகன்,

புதிய மீன்வள சட்டத்தால்  மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மீனவர்கள் நலனுக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த மத்திய இணை அமைச்சர், இந்தத் திட்டம் ஆலோசனை  அளவிலேயே உள்ளது என்றார். மேலும், கடலோர நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களுடன் இதுகுறித்து கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறிய அமைச்சர், மீனவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் தான் மீனவர்களுக்கு  தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், புதிய மீன்வள சட்டத்தின் மூலம் வெளி மாநில மீனவர்கள் தங்கள் பகுதிக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு மீனவர்கள் பதிவு முறை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் ஆழ்கடல் மீனவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

மீனவ பெண்கள் பயன்பெறும் வகையில் கடற்பாசி திட்டம் கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுய உதவி குழுக்கள்,  பெண்கள் பயனடைவர். மத்திய அரசின் மீன்வளம் மற்றும் மீன்வள கட்டுமான மேம்பாட்டு நிதியம்  மூலம் மீனவ கிராமங்களை தத்தெடுத்து அங்கு அடிப்படை வசதிகள், பள்ளி,  ஆகியவை ஏற்படுத்தி தரப்பட உள்ளது என்றார் அவர்.

தொடர்ந்து, சென்னை துறைமுகத்தை நவீனப்படுத்தும் திட்டம் குறித்து, கடலில் படகில் சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள துறைமுகத்தின் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்: மத்திய இணை அமைச்சர் திரு. எல். முருகன்

திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள துறைமுகத்தின் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் தெரிவித்தார்

மீனவ மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு நிதியம் (FIDF) பங்களிப்பு மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் 200 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அதிகாரிகளிடம் உரையாடிய அவர்,
தமிழகத்தில் திருவொற்றியூர், தரங்கம்பாடி, நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை  உள்ளிட்ட பகுதிகளில் துறைமுகங்களில் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்த மத்திய இணை அமைச்சர், துறைமுக பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார். திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள இந்த துறைமுகத்தின் மூலம் 8,000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும் என தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கடற்பாசி வளர்ப்பு திட்டத்தை துரிதப்படுத்தி, மீனவர்கள், மீனவ விவசாயிகளுக்கான முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் அவர். மத்சய சம்பத யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை கூடுதல் செயலர் திரு. ஜவகர், மீன்வளத்துறை இயக்குனர் திரு பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா