உள்துறை மானியக் கோரிக்கை விவாதங்களின்மீ து பதிலுரையாற்றிய முதல்வர் தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைவதாக தெரிவித்தார்

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்குப் பின் மீண்டும் இன்று செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெற்றது. காவல் துறை, தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.


மேலும், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடந்தது. அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படு இன்று  கேள்வி நேரம் இல்லை.இவ்வாறு சபாநாயகர் அறிவித்த நிலையில் முன்னதாக, விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள், 11ம் தேதி சட்டசபை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில்                                          உள்துறை மானியக் கோரிக்கை விவாதங்களின்மீ து பதிலுரையாற்றிய முதல்வர் தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தரும் பொறுப்புடைய தமது காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்..


சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே தமது இலக்கு என்றும்    காவலர்களின் நலனிற்காக வாரத்தில் ஒரு நாள் ஓய்வு, இடர் படி உயர்வு, காவல் ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் "கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. என்றும் 

தேர்தல் வாக்குறுதிகள் எதில் இருந்தும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும். கலைஞர் வழியிலான கழக அரசு சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் காட்டும்" என  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்."திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, சாதிச் சண்டைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, துப்பாக்கிச் சூடுகள் இல்லை, அராஜகங்கள் இல்லை" எனவும். தெரிவித்துள்ளார்.“நீட் தேர்வை இரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” எனவும். 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பின்,  தமிழ்நாடு முதலமைச்சர் பதிலளித்து உரையாற்றினார்.


நிர்வாக வசதிக்காக சென்னை காவல்துறை பிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியான நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அதை உறுதி செய்தார். சென்னை காவல்துறை 3 ஆக பிரிக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையரகம் தவிர தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காக சென்னை காவல்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இரண்டாக பிரிக்கப்பட்டது. 2 துணை ஆணையர்களை கொண்டு ஐஜி அந்தஸ்தில் ஆணையரைக் கொண்டு புறநகர் ஆணையரகம் அமைக்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் பழையபடி ஒரே ஆணையரகமாக சென்னை காவல் ஆணையரகத்தை அமைத்தார்.

சென்னை காவல்துறை ஏடிஜிபி அந்தஸ்த்தில் (சில நேரம் டிஜிபி அந்தஸ்து அதிகாரிகளும் பதவியில் இருந்துள்ளனர்) காவல் ஆணையர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகத்தில் மிகப்பெரிய ஆணையரகம் சென்னை காவல் ஆணையரகம் தான்.


டிஜிபி அந்தஸ்து உள்ள அதிகாரிகள் காவல் ஆணையராக பதவி வகிக்கும் மிகப்பெரிய காவல் ஆணையரகமாகும். தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சங்கர் ஜுவால் ஆணையராக உள்ளார். சென்னையில் சட்டம் ஒழுங்குக்கு மட்டும் காவல் ஆணையருக்கு அடுத்து இரண்டு ஐஜி அந்தஸ்து அதிகாரிகள் சட்டம் ஒழுங்குக்காக கூடுதல் ஆணையர்களாக (வடக்கு-மேற்கு) (தெற்கு-கிழக்கு) உள்ளனர்.

அவர்களுக்கு கீழ் டிஐஜி அந்தஸ்தில் 4 இணை ஆணையர்கள் உள்ளனர். அவர்களுக்கு கீழ் 12 துணை ஆணையர்கள், அவர்களுக்கு கீழ் வடக்கு மண்டலத்தில் 10, மேற்கு மண்டலத்தில் 12, தெற்கு மண்டலத்தில் 17 கிழக்கு மண்டலத்தில் 9 என மொத்தம் 48 உதவி ஆணையர்கள் உள்ளனர். அதற்கு கீழ், நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் என பெரிதாக விரிகிறது.

 காவல்துறை மானியக்கோரிக்கையை முதலில் 9 ஆம் தேதி தாக்கல் செய்த நிலையில் அதன்மீது விவாதம் நடந்த நிலையில் இன்று காலை முதல்வர் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சென்னை காவல் துறை 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார்.

1. சென்னை காவல் ஆணையரகம், 2. ஆவடி காவல் ஆணையரகம், 3. தாம்பரம் ஆணையரகம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. அதற்கு முன் சென்னையின் காவல் மாவட்டங்கள் குறித்து பார்ப்போம். சென்னையில் தற்போது நான்கு மண்டலங்கள் டிஐஜி அந்தஸ்து அதிகாரிகளால் நிர்வாகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்தின் கீழும் 3 துணை ஆணையர்கள் தலைமையில் காவல் மாவட்டங்கள் என மொத்தம் 12 காவல் மாவட்டங்கள் உள்ளன.

 சென்னையில் கூடுதலாக 2 காவல் மாவட்டங்களை உருவாக்க ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏற்கெனவே இருக்கும் 1.வண்ணாரப்பேட்டை, 2. பூக்கடை, 3.மாதவரம், 4.திருவல்லிக்கேணி, 5.கீழ்ப்பாக்கம், 6. மயிலாப்பூர், 7.அடையாறு, 8.தி.நகர், 9.மவுண்ட், 10. அண்ணாநகர், 11.புளியந்தோப்பு , 12. அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்டங்களுடன் புதிதாக 13.பூந்தமல்லி, 14.தாம்பரம் என கூடுதலாக உருவாக்கப்படுகிறது.

சென்னையை மூன்று காவல் ஆணையரகமாக பிரிக்கப்பட்டால் புதிதாக உருவாக்கப்பட்டு சேர்க்கப்படும் இரண்டு காவல் மாவட்டங்களுடன் சேர்த்து 14 காவல் மாவட்டங்களில் 5, 5, 4 என்கிற விகிதத்தில் பிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1. சென்னை காவல் ஆணையரகம், 2.தாம்பரம் ஆணையரகம், 3. ஆவடி காவல் ஆணையரகம், என இருக்கும்.

இதில் சென்னை, தாம்பரம் இரண்டும் 5 காவல் மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும். ஏடிஜிபி அந்தஸ்த்தில் ஆணையர் இருப்பார், ஆவடி ஆணையரகம் 4 காவல் மாவட்டம் அடங்கிய நிலையில் ஐஜி அந்தஸ்த்தில் அதிகாரி இருப்பார் என்று கூறப்படுகிறது.

சென்னைக்கு 1.திருவல்லிக்கேணி, 2.கீழ்பாக்கம், 3. மயிலாப்பூர், 4. புளியந்தோப்பு, 5.பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களும் , தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் 1. தாம்பரம், 2. மவுண்ட், 3. அடையாறு, 4. பூந்தமல்லி, 5.தி.நகர் ஆகிய காவல் மாவட்டங்களும், ஆவடி ஆணையரகத்தின் கீழ் 1.அண்ணாநகர், 2.அம்பத்தூர், 3. மாதவரம், 4.வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் மாவட்டங்களும் அடங்கும்.

இதற்கான பரிந்துரைகள், இடம் காவல் நிலையங்கள் ஒதுக்கப்படுவது குறித்த ப்ளூ பிரிண்ட் தயார் செய்யப்பட்டவுடன் சென்னை காவல் ஆணையர் தவிர புதிதாக உருவாக்கப்படும் தாம்பரம் ஆணையரகத்துக்கு ஏடிஜிபி அந்தஸ்த்தில் ஆணையரும், ஆவடிக்கு ஐஜி அந்தஸ்த்தில் ஆணையரும் நியமிக்கப்படுவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா