நிலக்கரி எரிவாயு உற்பத்திக்கான சூழலை உருவாக்க வேண்டும்: எஃகுத்துறை அமைச்சர் அழைப்பு

எஃகுத்துறை அமைச்சகம் நிலக்கரி எரிவாயு உற்பத்திக்கான சூழலை உருவாக்க வேண்டும்: எஃகுத்துறை அமைச்சர் அழைப்பு


எஃகு உற்பத்தியில், நிலக்கரி எரிவாயுவை பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்து, எஃகு தயாரிப்பு துறையினர், சிஎஸ்ஐஆர் - மத்திய சுரங்க மற்றும் எரிவாயு ஆராய்ச்சி கழக அதிகாரிகளுடன் மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.


அப்போது உள்நாட்டு நிலக்கரி எரிவாயு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எஃகு அமைச்சர் வலியுறுத்தினார். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நிலக்கரி எரிவாயு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் எனவும், இதை எஃகு தயாரிப்பில் லாபகரமாக பயன்படுத்த முடியும் எனவும், இதன் மூலம் நிலக்கரி இறக்குமதியை குறைத்து தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்க முடியும் எனவும் திரு ராம் சந்திர பிரசாத் சிங் கூறினார்.


தற்போதைய சூழலில், எஃகு துறையில், நிலக்கரி எரிவாயுவை ஊக்குவிக்கும் வழிகள் குறித்து இதில் ஆலோசிக்கபட்டது.  தற்போதுள்ள நிலக்கரி எரிவாயு தொழில்நுட்பங்கள், அதன் நன்மை, தீமைகள், இந்திய நிலக்கரிக்கு இந்த தொழில்நுட்பம் ஏற்ற வகையில் இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


நிலக்கரி எரிவாயு உற்பத்திக்கான சூழலை உருவாக்கவும், இதற்கான உள்நாட்டு தொழில்நுட்பத்தை


மின்துறை அமைச்சகம், நிலக்கரித்துறை அமைச்சகம், பெட்ரோலியத்துறை அமைச்சக உறுப்பினர்கள் அடங்கிய குழுவை உருவாக்கவும் அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா