டிஜிட்டல் கல்வியின் மூலம் தரமான கல்வியை அனைத்து இடங்களிலும் கிடைக்க செய்வது குறித்த கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் நடத்தினார்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம்  டிஜிட்டல் கல்வியின் மூலம் தரமான கல்வியை அனைத்து இடங்களிலும் கிடைக்க செய்வது குறித்த கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் நடத்தினார்
டிஜிட்டல் கல்வியின் மூலம் தரமான கல்வியை அனைத்து இடங்களிலும் கிடைக்க செய்வது குறித்த கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நடத்தினார். கல்வி இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு செயலாளர் திருமதி அனிதா கர்வால், பிசாக்-என் தலைமை இயக்குநர் டாக்டர் டி பி சிங், பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி திரு சஷி எஸ் வேம்பட்டி மற்றும் கல்வி அமைச்சகத்தின் இதர அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூழலியலை உருவாக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆசிரியர் பயிற்சியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போதுள்ள தளங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான புதுமையான அணுகுமுறைக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

ஸ்வயம் பிரபா போன்ற முன்முயற்சிகளை வலுப்படுத்தவும், தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு மற்றும் தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கவும் அவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் இடைவெளிகளை சமன் செய்து, இதுவரை சென்றடையாதவர்களை சென்றடைந்து கல்வியில் அதிக உள்ளடக்கத்தை கொண்டு வர வேண்டிய தேவை குறித்து அவர் வலியுறுத்தினார்.பள்ளி கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாட்டு அமைச்சகம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை, பிரச்சார் பாரதி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பிசாக்-என் மற்றும் விண்வெளி துறை ஆகியவற்றை சேர்ந்த மூத்த அதிகாரிகளின் குழு பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு செயலாளரின் தலைமையில் அமைக்கப்படலாம் என்று அமைச்சர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா