முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய திருப்பத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு வரப்போகிறது பல அதிரடி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த வாடகைக் கார் உரிமையாளர் நவ்சாத் மற்றும் புரோகர் நவ்ஃபுல் ஆகியோரிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.


2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத்துவங்கியுள்ளது. வழக்கில் கூடுதல் விவரங்கள் கிடைக்கப்பெற்றதால் காவல்துறை மேல் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து, கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய இனோவா காரின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த நவ்சாத் மற்றும் புரோகர் நவ்ஃபுல் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில்.

 ஆஜரான இருவரிடமும் தனிப்படை டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலானவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது எஸ்டேட் காவலாளியான கிருஷ்ண தாபா-விடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை நேபாளத்தில் இருந்து கூட்டி வர தனிப்படை  விரைவில் செல்லவிருப்பதாகத் தகவல். அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கோயமுத்தூர் மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் தொடர்ந்து இரண்டாம் நாளாக உதகையில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்





கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நான்காவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சார்ந்த ஜம்சீர் அலி மற்றும் பத்தாவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் ஆகியோரை விசாரிக்க தனி படைக் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும்,  காவலாளி கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி ஜெயலலிதாவின் காருக்கு பழைய டிரைவரான ஆத்தூர் பகுதி கனகராஜ் என்பவன் தலைமையில் 11 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் நுழைந்து பணியிலிருந்த நேபாளம் கூர்க்கா  ஓம்பகதூரை கொலை செய்த பின்னர், ஜெ.ஜெயலலிதாவும் அவரது தோழி வி.கே. சசிகலா நடராஜனும் தங்கும் அறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த பல்வேறு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாரா அல்லது வேறு விதமாக நடந்த சம்பவமா எனத் தெரியாமல் இருக்கும் நிலையில்


முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட சயான் உட்பட 10 நபர்களைக்  கைது செய்தனர். இரண்டாண்டுகளுக்கு முன் டெல்லியில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் பத்தரிககைகளுக்கு அளித்த தகவலின் படி. அப்போது, முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி கே‌ பழனிச்சாமிக்கும் இந்த கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக தெரிவித்ததையடுத்து, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை அப்போது இருந்த அரசு காவல்துறை மூலம் அவர்களைக் கைது செய்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சயான் ஜாமீனில் வெளி வந்தான். இவ்வழக்கில் மேலும் பல புதிய உண்மை தகவல்களை அளிக்க வேண்டும் என சயான் காவல்துறையினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி அவரிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்ட இவ்வழக்கு விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் நடந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள், விசாரணை மேற்கொள்ள 4 வாரம் அவகாசம் அளிக்கக் கேட்டு கொண்டதனைத் தொடர்ந்து, நீதிபதி சஞ்சய்பாபா 4 வாரம் அவகாசம் அளித்து வழக்கை அக்டோபர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


அதைத்தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், முக்கிய சாட்சிகளிடம் ஐஜி சுதாகர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ஐஜி தலைமையில் காவல்துறையினர் உதகமண்டலம் பழைய எஸ்பி அலுவலகத்தில் விசாரணையை நடத்தினர். குற்றவாளிகளின் உறவினரிடமும், பார் உரிமையாளர் அணீஷ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்புச் சாட்சிகளாக 101 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, முக்கிய சாட்சிகளை மீண்டும் அழைத்து விசாரித்து வரும் நிலையில், மேலும் பலரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்


வழக்கு விசாரணை வேகமாக நடந்து வருகிற நிலையில், கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தனிப்படை காவல்துறையினர் விரைந்தனர். இதற்கிடையே பழைய எஸ்பி அலுவலகத்தில் ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.  கொடநாடு எஸ்டேட்டில் கொலை செய்யப்பட்ட காவலாளி ஓம்பகதூருடன், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா கோடநாடு எஸ்டேட் மற்றொரு வாயில் கதவில் பணியாற்றி வந்தார். அப்போது கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக அவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர் குடும்பத்துடன் நேபாளத்துக்குச் சென்று விட்டார். இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணை தொடங்கியுள்ள நிலையில், கூர்க்கா கிருஷ்ணதாபாவிடம் மீண்டும் விசாரிக்க தனிப்படை தீவிரமாக உள்ளது.


ஊட்டி பழைய கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் 2 பிரிவாக பிரிந்து, அதில் ஒரு கும்பல் கூடலூர் வழியாக காரில் தப்பி சென்றது. அந்த கும்பலுக்கு கார் வழங்கிய உரிமையாளர் நவுசத், ஏஜெண்ட் நவுபல் ஆகியோர் அரசு தரப்பில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரிடமும் ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். உண்மை வெளிச்சத்துக்கு வரத் தேவை சயானோட confession statement. தான் அது வந்தால் இனி கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொடூரச் செயல்களுக்கு முடிவுகள் வரும்.கொடநாடு வழக்கின் மறு விசாரணையில் முக்கிய ஆவணம்  கிடைத்திருக்கிறது. வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானுக்கு கோயமுத்தூரைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சந்தோஷ்குமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பவர் கொடுத்ததற்கான ஆவணம் உள்ளது தெரியவந்திருக்கிறது அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி ஆகிய மூவரின் துறைகளிலும் அதிக அளவில் டெண்டர்களை எடுத்தவர் தான்  சந்தோஷ்குமார். எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் வேலுமணிக்கும் மிகவும் நெருக்கமானவராக நம்பிக்கையானவராகவும் இருந்திருக்கிறார் இந்த சந்தோஷ்குமார். அவர்தான் கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானுக்கு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பவர்  கொடுத்திருக்கிறார்.





பின் பவர் கேன்சல் செய்யப்பட்டிருக்கிறது. பணம் கொடுப்பதற்கு பதிலாக தான் இந்த பவர் கொடுக்கப்பட்டிருக்கலாம். பணம் செட்டில்மெண்ட் செய்த பிறகு அந்த பவர் கேன்சல் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

சயானுக்கு 20 கோடிக்கு பவர் கொடுத்தவர் சந்தோஷ் குமார் என்றால், சந்தோஷ்குமாரை பவர் கொடுக்கச் சொன்னது யார் என்று விசாரிக்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள். இதனால் சந்தோஷ்குமாரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார்கள் எனத் தகவல்.   சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார் அளித்திருக்கும் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது. உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளின்படி குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி எந்த ஒரு கட்டத்திலும் காவல் துறை மீண்டும் புலன் விசாரணையை மேற்கொள்ளலாம். இதில் சந்தேகமோ, எதிர்ப்போ, தவறோ காண முடியாது. இதனால் வழக்கு காலதாமதம் ஆகும் என்று மனுதாரர் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. ஒரு குற்ற வழக்கின் உண்மையை வெளியில் கொண்டு வருவது தான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. புலன் விசாரணையில் குறைபாடு இருப்பது தெரியவந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இதில் ஒரே ஒரு நிபந்தனை. விசாரணை நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துவிட்டு விசாரணை செய்ய வேண்டும். கொடநாடு வழக்கில் காவல் துறையினர், விசாரணை நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். நீதிமன்றமும் அதை பதிவு செய்துள்ளது.பெரும்பாலும் விசாரணை முடியும் நிலையில் இருந்தாலும் நேர்மையான விசாரணையின் அடிப்படையில்தான் நியாயமான தீர்ப்புகளை வழங்க முடியும். எனவே இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை மேற்கொள்வது அவசியமாகிறது. உண்மையை வெளியில் கொண்டு வருவதுதான் முக்கியமாகும். நேர்மையான விசாரணைக்கும் விரைவான விசாரணைக்கும வித்தியாசம் உள்ளது என நீதியரசர் தனது தீர்ப்பில் குறிப்பட்டுள்ளார்கள்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறறவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி மேற்கொண்டு காவல் துறையினர் புலன் விசாரணை செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்ட பிறகும் இந்த விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்திருப்பது அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது மர்மத்தை வலுக்க வைக்கிறது.


முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மையை ஊருக்குச் சொல்வதற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என அதிமுக தலைமை அறிவித்தாக வேண்டும். என் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்த முடியாது. நான் அப்பழுக்கற்றவன். எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன் என எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்தாக வேண்டும். இவற்றைச் செய்யாமல் காவல்துறைக்கு உள்நோக்கம் கற்பிப்பது கண்டிக்கத்தக்கது. இதுவே குற்ற உடந்தையாகப் பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...