தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் ஏழு புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் ஏழு புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி. இதனால் 850 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
ஏழு மருத்துவக் கல்லூ
ரிகள்: நீலகிரி (150 மாணவர்கள்), விருதுநகர் (150 மாணவர்கள்), கள்ளக்குறிச்சி (150 மாணவர்கள் ), நாமக்கல் (100 மாணவர்கள் ), திருப்பூர் (100 மாணவர்கள்), திருவள்ளூர் (100 மாணவர்கள்), இராமநாதபுரம் (100 மாணவர்கள்)
இத் தகவலை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்தார்.
11 கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டிருக்கிறது தமிழக அரசு. ஆகஸ்ட் மாதம் தேசிய மருத்துவ அமைப்பு (National Medical Commission NMC) தமிழகம் வந்து ஆய்வு நடத்தி அதையடுத்து செப்டம்பரில் 7 கல்லூரிகளுக்கு அனுமதி.
இதன் காரணமாக, தமிழக மருத்துவ கல்லூரிகளின் இருக்கைகள் 4,300 ஆக உயரும் என்கிறது டைம்ஸ் ஆஃப் இண்டியா. அனால் 4,600 என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
கருத்துகள்