பாராலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகர் மற்றும வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜூக்கு பிரதமர் பாராட்டு
பிரதமர் அலுவலகம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் பாராட்டு
டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது பேட்மிண்டன் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணா நாகரின் மாபெரும் சாதனை ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் புன்னகையை தவழச் செய்துள்ளது. தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார். மேலும் பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜூக்கு பிரதமர் பாராட்டு
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“சேவை மற்றும் விளையாட்டின் அருமையான சங்கமம். சுஹாஸ் யாதிராஜ், ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையை தன்னகத்தே கொண்டுள்ளார். அவரது தலைசிறந்த விளையாட்டு செயல்திறனுக்கு நன்றி. பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.
கருத்துகள்