வங்கி ஊழியர் தவறால் வந்த பணம் திரும்ப கொடுக்க மறுத்த பீகார் நபர் கூறிய காரணத்தால் அதிர்ச்சியான நிகழ்வு

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் தாஸ். இவரது வங்கிக் கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறால் சுமார் ரூபாய் 5.5 லட்சம் டெபாசிட்  செய்யப்பட்டது. வங்கி கணக்குக்கு பணம் வந்த மகிழ்ச்சியில் அவர் இப்ப நான் எதையாவது வாங்கனுமே என்கிற ரீதியில் இஷ்டத்துக்கு பணத்தைச் செலவு செய்துவிட்டார்.  தன் கணக்குப் பணம் வந்தது குறித்து வங்கிக்கும் இவர் தெரியப்படுத்தாத நிலையில் பணத்தை வேறொருவர் கணக்கில் தவறாக வரவு வைத்துவிட்டோமென உணர்ந்த வங்கி ஊழியர்கள் ரஞ்சித் தாஸ் அக்கவுண்டில் பணம் டெபாசிட் ஆனதை உறுதி செய்தனர்.


ரஞ்சித் தாஸ் அக்கவுண்டை சோதனை செய்து பார்த்ததில் மினிமம் பேலன்ஸை தவிர ஒரு பைசா கூட அதில் இல்லை. அந்த இளைஞரைத் தொடர்புக்கொண்ட வங்கி ஊழியர்கள் உங்கள் கணக்கில் ரூபாய்  5.5 லட்சத்தை தவறாக வரவு வைத்துவிட்டோம் பணத்தைத் திருப்பித்தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். அந்த இளைஞர் கூறிய பதிலை கேட்டு வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுறேன்னு வாக்குறுதி குடுத்தார். அதில் முதல் தவணையாக ரூபாய் 5.5 லட்சம் என்னுடைய அக்கவுண்டில் போட்டிருக்கார். நான் பணத்தை செலவு செய்துவிட்டேன் திருப்பித் தரமுடியாது எனக் கூறீயுள்ளார்.

வங்கி ஊழியர்கள் நடந்த தவற்றை எடுத்துக்கூறியுள்ளனர். பிரதமர் உங்கள் கணக்கில் பணம் போடவில்லை நாங்கள் செய்த பிழையால் தான் இந்தத் தொகை வந்துவிட்டது எனக் கூறீயுள்ளார்.ஆனால் அந்த இளைஞர் பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன் திருப்பிக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வேறுவழியில்லாமல் காவல் நிலையத்தில் புகார் செய்த வங்கி அலுவலர்கள்.தகவல்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையில் நடந்த விசாரணையில், “இந்த வருடம் மார்ச் மாதம் என்னுடைய அக்கவுண்டுக்கு பணம் வந்தது நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பிரதமர் மோடி தேர்தலில் சொன்னபடி ரூபாய் 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துகிறேன்னு கூறியிருந்தாரே அதில் முதல் தவணையாக ரூபாய் 5.5 லட்சத்தை அளித்ததாக நினைத்தேன்.  அதனால் எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன். என்னுடைய வங்கிக் கணக்கில் ஒரு பைசா இல்லை எனக் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 2014 ஆம் ஆண்டு , வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டால் ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்ய முடியும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த நிலையில் எனவே தனது தன் வங்கிக் கணக்குக்கு டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய்.5.5 லட்சத்தை பிரதமர் மோடிதான் கொடுத்தார் என்று நம்பிய அந்த நபர் பணத்தை செலவு செய்துவிட்டதாகக் கூறி தரமறுத்துவிட்டார். இப்போது சிறையில் இருக்கும் நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கலாகி நீதிமன்றத்திற்கு விசாரணை வரும் போது இன்னும் சுவாரசியமான நிகழ்வு காணலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா