1000 மெகாவாட் திறனுள்ள மிகப் பெரிய மின்கல கருவிகளை கொள்முதல் செய்ய தயாராகிறது இந்தியா

எரிசக்தி அமைச்சகம்  1000 மெகாவாட் திறனுள்ள மிகப் பெரிய மின்கல கருவிகளை கொள்முதல் செய்ய தயாராகிறது இந்தியா


சோதனை முயற்சியாக 1000 மெகாவாட்  திறனுள்ள மின்கலன் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான   திட்டத்துக்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் மின்துறை அமைச்சகத்தின் கூட்டு முயற்சி.

2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மிகப் பெரிய மின்கலன் அமைப்புகள் தேவை. 1000 மொகாவாட் திறனுள்ள மின்கலன்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை கோர  புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின், இந்திய சூரிய மின்சக்தி கார்பரேஷன் முடிவு செய்துள்ளது.  ஏலத்துக்கு முந்தைய கூட்டம், அக்டோபர் 28ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.  பல தரப்பினரின் ஆலோசனைகளை பெற்றபின், ஒப்பந்தத்துக்கான அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா