முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகளாவிய பட்டினி அறிக்கை 2021 பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் உலகளாவிய பட்டினி அறிக்கை 2021 பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை


கன்சர்ன் வோல்ட் வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்பி என்ற நிறுவனங்கள் கடந்த 14ம் தேதி வெளியிட்ட உலகளாவிய பட்டினி அறிக்கை 2021- குறித்து கீழ்கண்ட கருத்துக்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



‘‘ ஊட்டசத்து குறைவான மக்கள் தொகை விகிதப்படி, உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) மதிப்பீட்டின் அடிப்படையில் உலகளாவிய பட்டினி அறிக்கை 2021, இந்தியாவின் தர வரிசையை குறைத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது அடிப்படை யதார்த்தம் மற்றும் உண்மை அல்லாதது. இதில் சரியான முறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த அறிக்கையை வெளியிடும் முன், அதை வெளியிட்ட நிறுவனங்கள் அதை சரிபார்ப்பதில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

உணவு மற்றும் வேளாண் அமைப்பு மேற்கொள்ளும் முறை, அறிவியல் பூர்வமானது அல்ல. 4 கேள்விகள் அடிப்படையில் போன் மூலம் கருத்து கேட்டு இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை மதிப்பிட எடை, உயரம் போன்ற அறிவியல் பூர்வமான அளவீடுகள் தேவை. கொவிட் காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்ட பிரம்மாண்ட முயற்சியை இந்த அறிக்கை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இந்த கருத்து கணிப்பில், பதில் அளித்தவர் அரசிடம் இருந்து உணவு தானிய உதவி பெற்றாரா என ஒரு கேள்வி கூட இல்லை. இந்த கருத்து கணிப்பின் பிரதிநிதித்துவமும் சந்தேகிக்கும் வகையில் உள்ளது.


 உலகில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை  பற்றிய உலகளாவிய பட்டினி அறிக்கை 2021 மற்றும் எப்ஏஓ அறிக்கை, பொது தளத்தில் உள்ள கீழ்கண்ட உண்மைகளை முற்றிலும் புறக்கணித்துள்ளது.

1. கொவிட்-19க்கு பொருளாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டம் (PMGKAY) , ஆத்ம நிர்பார் பாரத் திட்டங்களை (ANBS) அமல்படுத்தியது.

ii.       பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாதம் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கியது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

iii.      2020ம் ஆண்டில் 3.22 கோடி மெட்ரிக் டன் உணவு தானியங்களும், 2021ம் ஆண்டில் 3.28 கோடி மெட்ரிக் டன் உணவு தானியங்களும், பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.

iv.      மேலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 19.4 கோடி குடும்பங்களுக்கு 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

v.       ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், சுமார் 8 லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் உணவு தானியங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2020ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் இலவசமாக வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் உணவு தானியங்களோடு, 0.27 லட்சம் மெட்ரிக் டன்கள் கொண்டைக் கடலையும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

vi.      தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கமான ஒதுக்கீட்டுடன், பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள்/ பருப்புகள் / கொண்டைக் கடலை ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.

vii.     இது தவிர வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் வழங்கிய ரேசன் கார்டு பயனாளிகளுக்கு வழங்க  ஒரு கிலோ கோதுமை மற்றும் அரிசி ரூ.21க்கு உச்சவரம்பு இல்லாமல் மாநிலங்களுக்கு கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டம் 2021 மே மாதத்துக்கு பிறகும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

viii.    வேலையில் இடையூறை தவிர்க்க அமைப்பு சார் தொழிலில், 100 தொழிலாளர்களுக்கு கீழ் பணிபுரியும் நிறுவனங்களில் ரூ.15,000க்கு கீழ் மாத ஊதியம் பெற்றவர்களுக்கு, அவர்களது பி.எப். கணக்கில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 24 சதவீத மாத ஊதியத்தை மத்திய அரசு செலுத்தியது.  

ix.      மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் ஊதியம் கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி ரூ.20 அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக கிடைத்தது. இதன் மூலம் 13.62 கோடி குடும்பங்கள் பயனடைந்தன.

x.       பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.7 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ.2,000 கடந்தாண்டு ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது.

xi.      20.4 கோடி ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் வங்கி கணக்கில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மாதம் ரூ.500 கருணைத் தொகை செலுத்தப்பட்டது.

xii.     பெண்களால் நடத்தப்படும் சுய உதவிக் குழுக்களுக்கு உத்திரவாதம் இல்லாத கடன் பெறும் அளவு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.

xiii.    கொவிட்-19 ஆல் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக 3 கோடி, வயதான விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை ரூ.1,000 வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...