சென்னை விமான நிலையத்தில் 2.55 கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

2.55 கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்


உளவுத்தகவல் அடிப்படையில் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு விமானங்களில் வந்த 5 பயணிகளிடம் சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 10 பொட்டலங்களில் தங்கப்பசையை உடலுக்குள் மறைத்துவைத்து கடத்தி வந்தனர். அவற்றிலிருந்து 2.55 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 4.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களும் சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் தொடர்பாக 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெறுவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா