96-வது நிறுவன தினத்தை ராணுவ செவிலியர் சேவை கொண்டாடியது

பாதுகாப்பு அமைச்சகம் 96-வது நிறுவன தினத்தை ராணுவ செவிலியர் சேவை கொண்டாடியது


துணிவு, இரக்கம் மற்றும் சேவையின் வரலாற்றை நினைவுகூரும் வகையில், ராணுவ செவிலியர் சேவை அதன் 96-வது நிறுவன தினத்தை 2021 அக்டோபர் 1 அன்று கொண்டாடியது.

அர்ப்பணிப்பு மற்றும் உறுதியின் மற்றொரு ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், தில்லி கன்டோன்மென்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அமைந்துள்ள ராணுவ மருத்துவ சேவை அதிகாரிகள் மையத்தில் நடைபெற்ற புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் தில்லி கேரிசனின் எம்என்எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கொவிட் -19 விதிமுறைகள் காரணமாக குறைவானோர் கலந்து கொண்ட போதிலும், ஒவ்வொருவரின் இதயத்திலும் உற்சாகம் கரைபுரண்டோடியது.

தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கு தேசியப் போர் நினைவிடத்தில் ராணுவ மருத்துவ சேவை கூடுதல் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி மலர் அஞ்சலி செலுத்தினார். கருத்தரங்குகள் மற்றும் உடல்நலம் தொடர்பான நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் நாடு முழுவதும் பல மருத்துவமனைகள் இந்த விழாவை கொண்டாடின.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்