கம்யூனிஸ்ட் கட்சியில் மேடைக்கலைவாணர் நன்மாறன் முன்னால் எம்எல்ஏ. காலமானார்
சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காட்சிக்கு எப்போதுமே எளியவரான நன்மாறன் வீட்டுக்கு சென்று வந்த பலர் அறிந்திருக்க முடியும்
பல ஆண்டுகளாக, அந்த 184 சதுர அடியுள்ள சின்ன குடில் வீட்டில் அவர் ஒருவரின் வருமானத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததை அன்று நேரடியாகப் பார்த்திருக்கிறேன்
ஆரப்பாளையத்தின் நெருக்கடிமிகுந்த பகுதியில் ஒரு சந்துக்குள் தான் அப்போது மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நன்மாறனின் வீடு இருந்தது .அவரது வீட்டுக்குள் நுழைந்து விட்டால் மூன்று பேர் மட்டுமே ஒரே நேரத்தில் நிற்க முடியும். பாட்டிகாலத்திலேயிருந்து வாடகைக்கு குடியிருந்து வந்த அந்த வீட்டை , வீட்டு உரிமையாளரின் வற்புறுத்தலின் பேரில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு வங்கியில் கடன்பெற்றும் ,நண்பர்களின் உதவியோடும் விலைக்கு வாங்கிக் குடியிருந்தார் . பொருளாதார சிக்கல் காரணமாக அண்மையில் அந்த வீட்டையும் விற்றுவிட்டு வாடகைக்கு வேறொரு வீட்டில் குடி போனதாக மதுரை பாலன் முக நூலில் பதிவு செய்திருந்ததைப் படித்து அதிர்ந்து போன பலர் வியாபார அரசியல் நடக்கும் இக்காலத்தில் ஒரு வார்டுக் கவுன்சிலர் கூட தனது பதவிக்காலத்தில் பல வீடுகளுக்கு அதிபதியாகும் காட்சிகளை அன்றாட அரசியலில் பார்த்துவரும் நமக்கு , இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் வாடகைக்கு ஒரு குடில் வீட்டில் குடியிருக்கும் மேடைக்கலைவாணர் நன்மாறனைப் பார்த்து அப்போது அதிசயிக்கத்தான் தோன்றும்.
தனக்காக, தனது பிள்ளைகளுக்காக யாரிடமும் உதவி கோரியோ வேலை கேட்டு சிபாரிசுக்குப் போகாதவர். அவர் எப்படியும் பொருளீட்டி எப்படியும் வாழலாம் என்று உலவும் அரசியல்வாதிகள் மத்தியில் , மேடையில் பேசும் வார்த்தைகளுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி வாழ்ந்து மறைந்த நன்மாறன் இடதுசாரி இயக்கத்தின் உன்னதமான அடையாளமாக விளங்கியவர்.
மூத்த கம்யூனிஸ்ட் வாதிகள் கே பி ஜானகியம்மாள், என்.சங்கரய்யா , ஏபாலசுப்ரமணியம் , பி.ராமச்சந்திரன் , என்.வரதராசன் போன்றவர்களால் வழிநடத்த நன்மாறன் அரசியல் குடத்திலிட்ட விளக்கு.ஊழல்கள் இல்லாத மனிதர்
மேடையில் நின்று தனது நகைச்சுவை உரையால் குலுங்கக் குலுங்க அனைவரையும் சிரிக்கவைக்கும் மேடைக் கலைவாணர் உடல்நலக் குறைவு ஏற்படும் போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வரிசையில் நிற்கும் அவரைக் காணும் போதில் முன்னாள் அமைச்சர் கக்கனையும், சட்டமன்றத்தில் பத்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு மதுரைக்கு புத்தகங்களும் துண்டும் கொண்டிருந்த பையுடன் திரும்பியதில் நிருபன் சக்கரவர்த்தியையும் நினைவுபடுத்தும் நன்மாறன் அரசியலில் அனைவருக்கும் நல்ல முன்மாதிரி.என கம்யூனிஸ்ட் தோழமை கொண்ட நண்பர்கள் பலர் சிலாகித்து பேசும் நிலை.
கருத்துகள்